6091. கூறுவார் வாய்திறந்து
முனியார்தாமும் கொப்பெனவே பொதிமாட்டுக் காரரருக்கு
தேறுதலாய் வார்த்தையது
கூறும்போது தேற்றமுடன் அதிலொருவன் தானெழுந்து
மாறுதலாய் சித்துமுனி
தம்மைப்பார்த்து மகத்தான ரிஷியாரே பண்பாய்க் கேளும்
ஆறுபுடை சூழ்ந்திருக்கும்
நதியோரத்தில் அசோகமென்ற விருட்சமது விழுகலாச்சே
விளக்கவுரை :
6092. விழுந்ததொரு அசோகமென்ற
விருட்சந்தன்னை வீறுடனே நிமிரவது செய்வீரானால்
பழுதுபடா திருமேனி
யுந்தனுக்கு பட்சமுடன் கெற்பமது தருவோம்நாதா
வழுதுணையாங் கற்பமது
கொண்டபோது மகத்தான சித்துமுனி யெங்களுக்கு
முழுதுமே புகையிலையின்
கற்பந்தன்னை முளையாக யாங்கொடுப்போங் காணீர்தானே
விளக்கவுரை :
[ads-post]
6093. காணவே மாண்பரெல்லாங்
கூறும்போது கருவான சித்துமுனி ரிஷியார்தாமும்
தோணவே யவர்களுக்கு
பிரம்மைதோன்ற துப்புரவாய் சித்துமுனி நாதரல்லோ
வேணதொரு காயாதி கொண்டசித்து
வேகமுடன் அசோகமென்ற விருட்சந்தன்னை
பூணவே தானோக்கிப்
பார்த்துமல்லோ புகழான விருட்சமதை நிறுத்தினாரே
விளக்கவுரை :
6094. நிமிர்த்தவே வருட்சமது தானெழுந்து
நீதியுடன் இலையூன்றி நிற்கும்போது
சமர்த்துள்ள சித்துமுனி
தம்மைக்கண்டு தாரணியில் மகிமை பெரிதுமல்ல
கமர்போன்ற கானகத்தில்
இருக்குங்கல்லாம் கடிதான மலைகல்லைத் தன்னைத்தானும்
சுமர்ந்துமே எந்தனிடங்
கொண்டுவந்து சுந்தரரே கொடுத்தாலே நம்புவோமே
விளக்கவுரை :
6095. நம்புவோமென்றல்லோ
மாண்பரெல்லாம் நயமுடனே வார்த்தையது மனதுவந்து
வம்புடனே சித்துமுனி
தன்னைக்கண்டு வளமுடனே வார்த்தையது கூறும்போது
தெம்புடனே குண்ணுமலைத்
தன்னைத்தூக்கி தீரமுடன் பொதிமாட்டுக்காரர்முன்னே
கும்பல்தனில் முண்ணதனை
யெடுத்துமல்லோ கொப்பெனவே கொண்டல்லோ போட்டிட்டாரே
விளக்கவுரை :