6096. போட்டாரே சித்துமுனி
ரிஷியார்தாமும் பொங்கமுடன் கொண்டுவந்து மாண்பர்முன்னே
நீட்டமுடன் முண்ணதனைக்
கொண்டுவந்த நிலையான வித்தையது மகிமையல்லோ
வாட்டமுடன் இன்னமொரு
மார்க்கஞ்செய்தால் மகத்தான மகிமையென்று நம்பியல்லோ
கூட்டமுடன் உந்தமக்கு
பணிகள்செய்து கொப்பெனவே சீஷர்களா யிருப்போம்தானே
விளக்கவுரை :
6097. தானான வார்த்தையது கேட்டபோது தண்மையுடன் சிவஞான சித்துதாமும்
கோனான பொதிமாட்டுக்
காரர்தம்மை கொப்பெனவே மகிமையது யென்னவேண்டும்
தேனான மகிமையது வேண்டுமானால்
தேற்றமுடன் சித்தொளிவுஞ் செய்யக்கூடும்
மானான மகதேவர் கடாட்சத்தாலே
மார்க்கமுடன் மகிமையது வதிதமுண்டே
விளக்கவுரை :
[ads-post]
6098. nதருவேனென்று சித்துமுனி
கூறும்போது தகமையுள்ள பொதிமாட்டுக் காரர்தாமும்
குருவான சித்துமுனி
ரிஷியாரேகேள் கொற்றவரே எங்களுக்கு இன்றுதானும்
பருமழையு மின்னலிடி
காந்தல்தாமும் பட்சமுடன் வரவழைப்பீர் ஆனாலல்லோ
திருவான குருவென்று
வும்மைத்தானும் தீரமுடன் எந்நாளும் வந்திப்போமே
விளக்கவுரை :
6099. வந்திப்போம் உம்மையொரு
குருவாயெண்ணி மகத்தான நாதாக்கள் நீர்தானென்றும்
சிந்திப்போம் சதாகால
மர்ச்சித்தேதான் சீருடனே சின்மயத்தை மனதிலுன்னி
எந்நாளுங் கிரிவாழும்
பதாம்புயத்தை எழிலான சர்குருமை மெய்க்குருவென்றெண்ணி
பந்நியே கிரிதனிலே
மாண்பரெல்லாம் பாங்குடனே சதாநித்தம் அர்ச்சிப்போமே
விளக்கவுரை :
6100. போமேதான் வார்த்தையது
கூறும்போது பொங்கமுடன் வனத்துமகாரிஷியார்தாமும்
தாமேதான் சொன்னபடி
வனத்தில்தானும் தகமையுடன் மண்காற்று மழையுமாக
ஆமேதான் மின்னலிடி
ஜோதிபோலும் அவனியெலாந் தத்தளிக்க மிகவேசெய்தார்
வேமேதான் பொதிமாட்டுக்
காரரெல்லாம் விருப்பமுடன் கண்டல்லோ பிர்மித்தாரே
விளக்கவுரை :