போகர் சப்தகாண்டம் 6101 - 6105 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6101 - 6105 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6101. போமேதான் வார்த்தையது கூறும்போது பொங்கமுடன் வனத்துமகாரிஷியார்தாமும்
தாமேதான் சொன்னபடி வனத்தில்தானும் தகமையுடன் மண்காற்று மழையுமாக
ஆமேதான் மின்னலிடி ஜோதிபோலும் அவனியெலாந் தத்தளிக்க மிகவேசெய்தார்
வேமேதான் பொதிமாட்டுக் காரரெல்லாம் விருப்பமுடன் கண்டல்லோ பிர்மித்தாரே

விளக்கவுரை :


6102. பிர்மித்த சிறுபால மாண்பரெல்லாம் பேரான சித்துமுனி ரிஷியார்தம்மை
வர்மமுடன் பதாம்புயத்தை சுற்றிவந்து மனதுவந்து முடிசாய்த்து வஞ்சலித்து
தர்மமுள்ள நாதாந்த சித்தே நாங்கள் தாரணியில் எந்நாளும் உந்தமைத்தான்
ம்மமது வையால் வையகத்தில் மார்க்கமுடன் எந்நாளும் வசனிப்போமே

விளக்கவுரை :

[ads-post]

6103. வசனிப்பொஞ் சற்குருவே எந்தன்நாதா வளமையுடன் எந்நாளுங்கிரியில்வாழும்
நிசமுடைய வேதாந்த சித்தேகேளும் நிஷ்களங்காமானதொரு சொரூபபாதா
துசங்கொண்ட வீராதி சித்தேகேளும் துவாபரமா மூன்றுயுகந் தன்னில்தானும்
குசமுடைய சின்மயத்தில் இருந்தசித்தை கோடான கோடிவரை கண்டிட்டோமே

விளக்கவுரை :


6104. கண்டோமே வஷ்டகிரி தன்னில்நாதா காணோமேயும்மைப்போல் ஒருவரேனும்
தொண்டுசெய்து வெகுகோடி மாண்பரெல்லாம் தொல்லுலகில் கெட்டார்கள் அனந்தங்கோடி
விண்டுரை சொல்கேளாத வீணர்கோடி வெகுகோடி வையகத்தில் கண்டதுண்டு
துண்டரிகமானதொரு சித்துபோலே துப்புரவாய் வையகத்தில் காணோம்தானே

விளக்கவுரை :


6105. தானான கற்பமது கொடுக்கவேதான் தண்மையுள்ள பொதிமாட்டுக் காரரெல்லாம்
கோனான கிரிதனிலே இருக்குஞ்சித்து கொற்றவனார் மாயாவின் சித்துவுக்கு
மானான புகையிலையின் கற்பந்தன்னை மார்க்கமுடன் சித்தரவர் கொள்வதற்கு
பானான மாண்பரெல்லா மொன்றாய்க்கூடி பட்சமுடன் ஆள்பாரங் காட்டினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar