6106. கட்டினார் மாண்பரெல்லாம்
ஒன்றாய்க்கூடி கனமான சுமையதுவுமென்னசொல்வேன்
இட்டமுடன் சுமையதுவை
யெடுக்கும்போது எழிலான சித்துமுனி நடுக்கங்கொள்ள
வட்டமுடன் பாலரெல்லா
மொன்றாய்க்கூடி வளமான சித்தருக்கே கொண்டுசென்று
பட்டமரம் போலேயல்லோ
மாண்பரெல்லாம் பாதவித்து நின்றல்லோ பார்த்திட்டாரே
விளக்கவுரை :
6107. பார்த்தவுடன் மலையில் வந்த
சித்துதாமும் பாலரெல்லாந் தானடுங்க கரத்திலேந்தி
தீர்த்தகிரி சிலிங்கப்
பொதியைப்போலும் திறமுடனே கிரிதனிலே கொண்டுசென்று
பூர்த்தியுடன் குருபாதந்
தனைவணங்கி புகழுடனே வஞ்சலிகள் மிகச்செய்தாரே
விளக்கவுரை :
[ads-post]
6108. செய்யவே சித்துமுனி சீஷர்தாமும்
சிறப்புடனே குருநாதர் மனதுவந்து
துய்யபுகழ் புகையிலையின்
கற்பந்தன்னை துப்புரவாய் மனதுவந்து நாதர்தானும்
வெய்யவே காயாதி கற்பந்தன்னை
வேண்டியே விருப்பமுடன் கொடுத்த மாண்பர்
பையவே யெவ்விடத்தி
லிருப்போரப்பா பான்மையுடன் அவர்களுக்கு விதிசொல்வீரே
விளக்கவுரை :
6109. விதியான குருமதியி னுபதேசத்தை வித்தகனார் சீஷவர்க்கந் தானுங்கேட்டு
மதியான வுபதேசம் மாண்பருக்கு
மார்க்கமுடன் செய்வதற்கு மனதிலெண்ணி
துதியுடனே
பொதிமாட்டுக்காரர்தம்மை துப்புரவாய் அவர்மனதில் எண்ணங்கொண்டு
நிதியதுவுந் தான்கொடுத்து
மாண்பருக்கு நீதியுடன் உபதேசமெண்ணினாரே
விளக்கவுரை :
6110. எண்ணியே பொதிமாட்டு
மாண்பர்தம்மை எழிலாக வரவழைக்க மனதுபூண்டு
வண்ணமுடன் சரமாரி பொழியவல்லோ
மார்க்கமுடன் மகதேவர் தனைநினைத்து
திண்ணமுடன் ரிஷியாரும்
நினைக்கும்போது தீர்க்கமுடன் பிரளயங்கள் அதிகமாகி
எண்ணமுடன்
பொதிமாட்டுக்காரரெல்லாம் எழிலான மலைதனிலே வந்திட்டாரே
விளக்கவுரை :