போகர் சப்தகாண்டம் 6111 - 6115 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6111 - 6115 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6111. வந்ததொரு மாண்பரெல்லாஞ் சித்துதம்மை மகதேவர் முன்னிருந்த சித்தென்றெண்ணி
சொந்தமுடன் அவர்பாதம் முடிவணங்கி சுந்தரம்மா நெடுந்தூரம் சென்றோமையா
அந்தமுடன் சரமாரிபொழிந்துமல்லோ வையனே பிரளயங்கள் அதிகமாகி
விந்தையுடன் வந்ததொரு யிடையூர்தன்னால் விசனமுடன் மலையேறி வந்தோம்தாமே

விளக்கவுரை :


6112. வந்தோமே யென்றுசொல்லி மாண்பரெல்லாம் வளமுடனே சித்துவுக்குக் கூறும்போது
பந்தமுடன் மாண்பருக்கு சித்துதாமும் பட்சமுடன் கூறலுற்றார் நாதர்தம்மை
வந்தையது வுபதேசஞ் செய்வதற்கு வித்தகனார் குருமொழியின் வாக்கதாச்சு
சிந்தனையா யெல்லோரும் வந்திருந்து சிறப்புடனே சித்துமுனி கூறினாரே

விளக்கவுரை :

[ads-post]

6113. கூறினார் சித்துமுனி மாண்பருக்கு குவலயத்தில் நீங்கள்செய்த அறத்தினாலே
மீறியதோர் வுங்களுக்கு உபதேசங்கள் மிக்கமனு நீதியுடன் குருவின்வாக்கு
தேறியே பலநூலும் ஞானம்தேர்ந்து தேற்றமுடன் உங்களுக்கு உபதேசங்கள்
சீறியே கோபமது வாராமற்றான் சிறப்புடனே வுதேசஞ் செய்தார்பாரே

விளக்கவுரை :


6114. பாரேதான் உபதேசஞ் செய்தவண்ணம் பாருலகில் யாருக்கும் கிட்டாதன்று
நேரேதான் கிரியிலுள்ள வனப்பும்வாய்ந்து நேர்மையுடன் மனுநீதி கலைக்கியானம்
கூரேதான் வேதமுத லாறுசாத்திரம் குறிப்பான கலைக்கியானம் அறுபத்துநான்கு
தீரேதான் மாண்பருக்கு உபதேசித்தார் தீர்க்கமுடன் சித்துமுனி ரிஷியார்தாமே

விளக்கவுரை :


6115. தானான ரிஷியாரும் அன்புகூர்ந்து தகமையுடன் பொதிமாட்டுக் காரருக்கு
கோனான குருசொன்ன வாக்குபாதம் குவலயத்தில் யாதொன்றும் குறைவில்லாமல்
மானான மனோன்மணியாள்கடாட்சத்தாலும் மகத்தான காலாங்கி கிருபையாலும்
தேனான தேவர்முனி ரிஷியார்பாதம் தெளிவுடனே வாதமது போதிப்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar