போகர் சப்தகாண்டம் 6116 - 6120 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6116 - 6120 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6116. போதிக்க வாதமது யாதென்றாக்கால் போக்கான மலைதோறும் குன்றுதோறும்
ஆதித்தன் சந்திரனார் காணாவண்ணம் அகஸ்தியனார் மலைமூலி யனைத்துங்காட்டி
வாதிகளு மறியாத மூலிவர்க்கம் வளமையுடன் கிரிமூலி பசிமூலியாவும்
வேதிக்கி மூலிகளும் அனைத்துங்காட்டி வேகமுடன் உபதேசஞ்செய்திட்டாரே

விளக்கவுரை :


6117. செய்துமே யேமமென்ற வித்தைதன்னை செப்பினார் பொதிமாட்டுக் காரருக்கு
கைதவமாம் மூலிகைக்குச் சாபஞ்சொல்லி கபடகற்றி வுளவுமுதல் யாவுங்காட்டி
வையகங்கள் தான்புகழ மாண்பருக்கு வண்மையுடன் ஏமமென்ற வித்தைதன்னை
துய்யபுகழ் மாண்பருக்கு  வுளவுமூலி செப்பினார் நாதரிஷி செப்பினாரே

விளக்கவுரை :

[ads-post]

6118. செப்பவே யின்னமொரு மார்க்கங்கேளு செயலான புலிப்பாணி மைந்தாபாரு
ஒப்பமுடன் பொதிமாட்டுக்காரர்தாமும் ஓகோகோ நாதாக்கள் முனிவருக்கு
தப்பிதங்கள் நேராமல் புகையிலை கற்பஞ் சட்டமுடன் தான்கொடுத்த வுபசாரத்தால்
செப்பவே யேமமென்ற மூலிதன்னை செயலாகக் காண்பித்தார்கண்டிட்டேனே

விளக்கவுரை :


6119. கண்டேனே வனத்தினுட மூலியெல்லாம் கருவாகக் குளிகைகொண்டு கிரியைசுற்றி
விண்டதொரு மூலிகையின் வகுப்பையெல்லாம் விருப்பமுடன் உந்தமக்கு வுபதேசங்கள்
பண்டதுபோல் யான்வகுத்து சொல்வேனப்பா பட்சமுடன் மூலியது போக்குசொல்வேன்
சண்டமாருதம்போல செய்வாய்நீயும் சாங்கமுடன் கருமிகட்குச் சொல்லொண்ணாதே

விளக்கவுரை :


6120. சொல்லவென்றால் இன்னமொரு மார்க்கங்கேளு தூயதான வசளையென்ற மூலிமார்க்கம்
புல்லவே கறுவாளைக் கொண்டுவந்து புகழான முப்பூவுங்கூடச்சேர்த்து
கொல்லவே தாம்பரமாந் தகட்டின்மேலே கொப்பெனவே முப்பூவை மத்தித்தேதான்
மெல்லவே தகட்டின்மேல் பூசியேதான் மேன்மையுடன் கோழியென்ற புடத்தைப்போடே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar