6121. போடேதான் புடமதுவும்
மாறிப்பாரு பொங்கமுடன் மாற்றதுவும் என்னசொல்வேன்
கூடேதான் நவலோகஞ்
செந்தூரங்கள் கூறான மூலிகைக்கு யீடுமுண்டோ
நாடேதான் மூலிவகை யறியா
மாண்பர் நாட்டினிலிலே கெட்டார்கோடி
மாடேதான் குருமுடிக்கும்
வகையுங்காணார் மட்டிகளாங் கூர்மையில்லா மாண்பர்தானே
விளக்கவுரை :
6122. மாண்பான யின்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
காண்பான பொன்முசுட்டை
மூலிதானும் காடெல்லாந் திரிந்தாலும் கிடையாதப்பா
மாண்பான காணாறு குகைகள்கண்டு
மடிந்தவர்கள் கணக்கில்லைகோடாகோடி
சாண்பாம்பு நீளமப்பா
மூலிதானும் சட்டமுடன் ஆணிவேர் அறாமற்றானே
விளக்கவுரை :
[ads-post]
6123. ஆணியாம் மூலிகைக்கு மூலமப்பா
வப்பனே சாணீளஞ் சொல்லலாகும்
காணிமுதல் காடெல்லாந்
திரிந்திட்டாலும் கசடருக்கும் கிட்டாது கர்மிகட்கும்
வாணியாஞ் சரஸ்வதியாள்
வீற்றிருக்கும் வளமான மூலியது பொன்முட்டை
பாணியது பூமிவளந் தன்னிலப்பா
பாங்கான மூலியது காணாதன்றே
விளக்கவுரை :
6124. அன்றான மூலிகைதான்
கொண்டுவந்து வப்பனே முப்பூவுங் கூடச்சேர்த்து
குன்றான சமூலமுடன்
கூட்டியல்லோ கொற்றவனே குருத்தயிலமாகக்கொண்டு
வென்றிடவே நவலோகத்
தகட்டின்மேலே வீரமுடன் தயிலமதைப் பூசியல்லோ
சென்றிடவே பாண்டமென்ற
வோட்டிலப்பா செம்மலுடன் சீலையது வலுவாய்ச்செய்யே
விளக்கவுரை :
6125. வலுவான சீலையது செய்தபின்பு மகத்தான புலிப்பாணி மன்னாகேளு
சுலுவான புடமதுவுங் கோழியாக
துப்புரவாய்ப் போட்டெடுக்க ஏமந்தானும்
மலுவான தடமதுவும்
பழுப்புமேறி மகத்தான மாற்றதுவும் ஐநூறாகும்
நிலுவையாம் பிரிதிவென்ற
தங்கமப்பா நீதிசொல்ல யிதற்கீடு சொல்லொண்ணாதே
விளக்கவுரை :