போகர் சப்தகாண்டம் 6126 - 6130 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6126 - 6130 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6126. சொல்லவே யின்னமொரு மார்க்கங்கேளு சுந்தரனே புலிப்பாணி மன்னாபாரு
வெல்லவே நாதாக்கள் சொல்லவில்லை வேதாந்தத் தாயாருஞ் சொல்லவில்லை
புல்லவே காலாங்கிநாதர்தாமும் புகழான வகஸ்தியருங் கூறவில்லை
நல்லதொரு குளிகையது பூண்டதாலே நாட்டிலே நானுமல்லோ வறிந்திட்டேனே

விளக்கவுரை :


6127. அறிந்தேனே பொன்னினாவாரையப்பா வழகான மலைதோறும் சுனைகள்தோறும்
செறிந்துமே மூலிகையின் வுளவுபார்த்து செம்மலுடன் முப்பூவுங் களஞ்செடுத்து
முறிந்துமே போகாமல் தயிலமாக்கி மூர்க்கமது வாராமல் மனதிலுன்னி  கு
றித்ததொரு தயிலமதை யெடுத்துக்கொண்டு கொற்றவனே குடவனிலே பூசிடாயே

விளக்கவுரை :

[ads-post]

6128. பூசிடவே குடவனிலே என்னசொல்வேன் புகழான நாதாக்கள் கூறவில்லை   
காசியென்ற செம்பதுவுங் காணும்போது கனமான மாற்றதுவும் இருநூற்றெட்டு  
மாசிபடா தங்கமது என்னசொல்வேன் மகத்தான பிரதிவென்ற தங்கமாச்சே
ஊசியென்னும் இரும்பினிலே தாக்கினாக்கால் வுத்தமனே சுயத்தங்கம் அயத்தங்கமாமே

விளக்கவுரை :


6129. தங்கமாம் இன்னமொரு வதிதஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மகனேகேளு
அங்கமாம் பொன்னூமத்தையப்பா அழகான மூலியது கொண்டுவந்து
துங்கமாம் வழலையது வராகனொன்று துப்புரவாய் மூலியது சாற்றினாலே
பொங்கமுடன் மதியென்ற தகட்டிலப்பா புகழாகப் பூசிடவே யேமமாமே

விளக்கவுரை :


6130. ஏமமாங் காயாதி கொண்டமூலி எழிலான காயகற்ப மூலியாகும்
சாமமென்ற மூலியது வாணமூலி தாக்கான சித்தருண்ணும் மூலியாச்சு
வாமமுடன் மாற்றதுவும் எழுநூற்றெட்டு வளமான சுயத்தங்கம் பிறவித்தங்கம்
நேமமென்ற பூசைக்குக் கருவித்தங்கம் நெடிதான சித்துமுனி மூலியாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar