போகர் சப்தகாண்டம் 6131 - 6135 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6131 - 6135 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6131. ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வப்பனே புலிப்பாணி மன்னாகேளு
மூச்சடங்கி நெடுங்காலங் கொண்டசித்து மூதுலகில் யாரேனுங் கண்டதில்லை
பாச்சலென்ற மூறலியது கறுங்கையானாகும் கதிரோனை கண்மறைக்கும் மூலிதானும்
மாச்சலென்ற மூலியது வதிதஞ்சொல்வேன் மகத்தான மாற்றதுவும் நூற்றெட்டுமாமே

விளக்கவுரை :


6132. எட்டான மூலியது துலமேயாகும் எழிலான பூநீறு களஞ்சியாகும்
சட்டமுடன் மத்தித்து வெண்ணையாக்கி சதிரான செம்பென்ற தகட்டிற்பூசி
திட்டமுடன் சில்லிட்டுச் சீலைசெய்து சிறப்பான புடமதுவுங் கோழியாக
வட்டமுடன் ஆறியபின் எடுத்துப்பாரு மகத்தான தங்கமென்ற செம்புமாமே

விளக்கவுரை :

[ads-post]

6133. செம்பான செம்பதுவு மென்னசொல்வேன் செழிப்பான தங்கமென்ற செம்புமாச்சு
அம்பொன்னாந் தங்கமென்ற செம்புதன்னை வப்பனே பதிதனிலே நூற்றுக்கொன்று
கும்பிடவே தானுருக்கிக் குருவொன்றீய குற்றமற்ற மதியதுவுந் தங்கமாச்சு
வெம்பியதோர் விஷமதுவுந் தீண்டினாற்போல் வேதாந்த சித்தனுட தங்கங்காணே

விளக்கவுரை :


6134. காணவே தங்கமதை யென்னசொல்வேன் கைலாச நாதருந்தான் காணமாட்டார்
பூணவே சுயத்தங்கம் பிறவித்தங்கம் புகழான நாதாக்கள் செய்யும்தங்கம்
ஆணவங்கள் காவியங்கள் ஒடுக்குந்தங்கம் அரகரா யித்தங்கம் என்னசொல்வேன்
வேணதொரு நாதாக்கள் பாடுபட்டு வேதைமுகங் காணாமல் மறைத்திட்டாரே

விளக்கவுரை :


6135. மறைத்தாரே யித்தங்கம் ஆருக்கென்றால் மகத்தான சிவயோகி ஞானிகட்கும்
குறைந்தங்க மானாலே வையகத்தில் கொற்றவர்கள் மாண்பருக்கு விடுதியாகும்
நிறைந்ததொரு பரிபூரணத் தங்கமப்பா நீதியுள்ள ஞானிகட்கும் சிவயோகிக்கும்
மறைகொண்டு கானகத்தில் வாழுஞ்சித்து சீரான தேவரிஷி வாய்க்குந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar