போகர் சப்தகாண்டம் 6136 - 6140 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6136 - 6140 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6136. வாய்க்குமே மற்றவர்க்குச் சித்தியில்லை மகத்தான கொற்றவருங் கண்டதில்லை
காய்க்குமே யிம்மூலி வேதைதன்னை காசினியில் ஆருக்குங் கிட்டாதப்பா 
தோக்கமலம் வீற்றிருக்கும் அம்பாள் பாதம் தொழுதுமே பணிந்துநித்தம் சதாகாலந்தான்
சேய்போலே யம்பாட்குப் பணிகள் செய்து சித்தம்வர மனதுவந்து நடந்துகொள்ளே  

விளக்கவுரை :


6137. கொள்ளவே யின்னமொரு வதிதஞ்சொல்வேன் கூரான புலிப்பாணி மகனேகேளு
எள்ளளவுங் கொளாறு நேராமற்றான் எழிலான கானகத்தின் மூலிகண்டேன்
மெள்ளவே சிறியானின் நங்கைதன்னை மேன்மையுடன் கொண்டுவந்து கூறக்கேளும்
விள்ளவே மூலியது சாற்றிலப்பா வீரமுடன் சூதமதைத் தாக்கிடாயே

விளக்கவுரை :

[ads-post]

6138. தாக்கவே சூதமென்ற ரசத்தைத்தானும் தண்மையுள்ள நாகமதில் தன்னிலூட்ட
நோக்கமுடன் நாகமது கண்ணடைந்து நெருங்கியே சவளையது போலேயாகும்
ஊக்கமுடன் சவளையது எடுத்துமைந்தா ஓகோகோ நாதாக்கள் சொன்னநீதி
தூக்கமது கொள்ளாமல் செம்பிலப்பா துப்புரவாய் நூற்றுக்கு ஒன்றுதாக்கே

விளக்கவுரை :


6139. ஒன்றான சவளையது கொடுத்தபோது வுத்தமனே மாற்றதுவு மென்னசொல்வேன்
வென்றிடவே மாற்றதுவும் அறுபத்துநான்கு வேதாந்தத் தாயாரும் வுரைத்தநீதி
குன்றினில் வாழ்சித்தர்முனி கூறாரப்பா குவலயத்தில் வுந்தனுக்காய் உரைப்பேன்யானும்
சென்றிடவே நெடுங்காலம் மலையில் காத்து செம்மலுடன் வாங்கியதோர் வேதைபாரே

விளக்கவுரை :


6140. பாரேதான் சிறியானின் நங்கைவேதை பாருலகில் யார்செய்வார் மாண்பரப்பா
நேரேதான் நாதாக்கள் செய்யும்வேதை நேர்மையுடன் கண்டறிந்து மனதுவந்து
தீரேதான் உந்தமக்கு மனங்களித்து தீர்க்கமுடன் யான்கொடுத்த வேதைதன்னை
சீரேதான் மற்றவருங் காணாமற்றான் சீருலகில் புத்திவானாய் வாழ்வீர்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar