6141. வாழவே யின்னமொரு வதிதஞ்சொல்வேன் மகத்தான புலிப்பாணி
யதிதவானே தாழவே பெரியாளின்
மூலியப்பா தாரணியில் சித்தர்களுங் காணமாட்டார்
மூழவே கண்டாலுங் கூறமாட்டார்
முனையான மூலிதனை மறைத்துப்போவார்
சூழமே கானகத்தில்
இருக்குமூலி சுடர்மூலி விடமூலிச் சுருதியாமே
விளக்கவுரை :
6142. சுருதியாம் மூலியுட
வேகந்தன்னை சுந்தரனே என்னசொல்வேன் மச்சகேந்திரா
நிருதியாங் காடெல்லாந்
திரிந்தாலுந்தான் நிஷ்களங்கமானதொரு மூலிதன்னை
குருதியா மூலிநிறமேயாகும்
குவலயத்தில் கண்டவர்கள் விள்ளாரப்பா
பருதிமதி காணாத
விருட்சத்தின்கீழ் படர்ந்துமே தானிருக்கும் மூலியாமே
விளக்கவுரை :
[ads-post]
6143. மூலியாந் தழையதனைக்
கொண்டுவந்து முனையான ரசமதுவுந் துலமேயாகும்
நாலிலோர் பங்கதுவுஞ்
சூதந்தன்னை நலமுடனே தான்கூட்டி மத்தித்தேதான்
வேலியெனும் வீரமதை
கால்தான்கூட்டி வேகமுடன் தான்குழைத்து மன்னாகேளு
பாவீயெனும் பரித்தகட்டிற்
பூசியேதான் பாங்கான ஓட்டிலிட்டு சீலைசெய்யே
விளக்கவுரை :
6144. சீலையது செய்தபின்பு
ரவியில்வைத்து சிற்பரனே கோழியென்ற புடத்தைப்போடு
வேலையெனும் புடமதுவு
மாறிப்பின்பு வேதாந்தத் தாயதனை மனதிலுன்னி
நூலையது வரன்முறையாய்த்
தொகுப்புங்கண்டு நுட்பமுடன் கைபாகஞ் செய்பாகந்தான்
மாலையுடன் புடமாறி
யெடுத்துப்பாரு மகத்தான யேமமது களங்கமாச்சே
விளக்கவுரை :
6145. ஏமமென்ற களங்கதனை
எடுத்துமைந்தா எழிலான வெள்ளிதனில் நூற்றுக்கொன்று
வாமமுடன் தானுருக்கிக்
குருவொன்றீய மகத்தான வெள்ளியது யேமமாச்சு
நாமமென்ற வெள்ளியது
பிறவித்தங்கம் நாதாக்கள் கண்டதொரு நாகத்தங்கம்
ஆமமென்ற தங்கமது
வர்ணத்தங்கம் வப்பனே மூலிகையின் பெருமைபாரே
விளக்கவுரை :