போகர் சப்தகாண்டம் 6146 - 6150 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 6146 - 6150 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

6146. பெருமையா யனேகவித போக்குமுண்டு பேரான வழலைக்கு மூலிவேண்டும்
கருமமது தானகற்றி புண்ணியவானே காசினியில் சித்துபோல் பெயருங்கொண்டு
அருமையுள்ள சித்தருக்கு வடிபணிந்து வன்புடனே யேவலது மிகப்புரிந்து
ஒருமைபட வையகத்தில் எந்தநாளும் வுலகமதில் பெயருண்டாய் வாழ்வீர்தானே

விளக்கவுரை :


6147. தானான மாற்றதுவும் நூற்றிருபத்தெட்டு தண்மையுள்ள நாதாக்கள் செய்யுந்தங்கம்
கோனான சித்துமுனி யனேகமாக கூறினார் வெகுகோடி நூலிலப்பா
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேற்றமுடன் கண்டறிந்த வேதைதன்னை
மானான மகதேவர் புண்ணியத்தால் மகிழ்ச்சியுடன் எந்நாளும் மணங்கொள்வீரே

விளக்கவுரை :

[ads-post]

6148. மணமுடனே சிதாபாசம் மனதிலுன்னி மார்க்கமுடன் மதியமுர்தங்கொண்டுமல்லோ
கணலதுவும் நேராமல் யோகந்தன்னில் கழற்சியுடன் சிவயோக நிலையில்நின்று
குணமுடனே திரிகரண சொரூபராக குவலயத்தில் அஷ்டாங்க யோகங்கண்டு
வணங்கியே யஷ்டநிலை பதியைக்கண்டு வாமமுட னர்ச்சித்து வலுகொள்வீரே

விளக்கவுரை :


6149. உண்டான வித்தையது வனேகமுண்டு வுத்தமனே பார்க்கவென்றால் கண்கொள்ளாது
திண்டான வித்தையது சொல்வீரானால் தீரமுடன் செய்வதற்கு வையமில்லை
பண்டான குலைகளவு யில்லாவித்தை பட்சமுடன் எந்தமக்கு சொல்வீரானால்
வண்மையுடன் செய்துமல்லோ வுந்தமக்கு வளமையுடன் காட்சியது தருவேன்பாரே

விளக்கவுரை :


6150. கொள்ளவே யின்னமொரு குணமுஞ்சொல்வேன் கூரான புலிப்பாணி புனிதவானே
விள்ளவே காடெல்லாந் திரிந்தாலுந்தான் விட்டகுறை யருந்தாலே லயிக்கும்பாரு
வெள்ளமது கண்டாலே யழியுமூலி வேதாந்த தாயிருக்கு மூலியப்பா
எள்ளளவு குற்றமது நேராமூலி எழிலான கறுப்புக் கோடாலியாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar