5826. நண்ணவே சகலரிஷி சித்துதாமும்
நலமுடனே வையகத்து சமாதிதன்னில்
மண்ணதனில் இருந்ததொரு
சித்துமாச்சு மகத்தான வவர்போன்ற சித்துமல்ல
கண்ணவிந்த குருடனைப்போல்
கேணிதன்னில் காசினியில் இறங்கியல்லோ சித்துதானும்
தண்ணீரில் பனிரெண்டு
வாண்டுமட்டும் தன்மையுடன் வீற்றிருந்த சித்துதாமே
விளக்கவுரை :
5827. சித்தான சித்து
ஜலஸ்தம்பனசித்து சிறப்பான டமரகர்போல் சொல்லொண்ணாது
முத்தான கேணிவிட்டு
வந்தசித்து மூதுலகில் இவர்போலு மெங்குமுண்டோ
பத்தியுடன் வையகத்தில்
அனந்தஞ்சித்து பாரினிலே வெகுமுனிவர் இருந்தாரல்லோ
சாத்திரங்கள் மறவாத சித்தானாலும்
ஜலஸ்தம்பன சித்துபோலில்லைதானே
விளக்கவுரை :
[ads-post]
5828. இல்லையே இன்னமொரு
கவிதைசொல்வேன் எழிலான எந்தனிட மணியே கேளும்
சொல்லவே சுந்தரானந்தரப்பா
தொல்லுலகில் கேசரியாம் வித்தைதன்னை
புல்லவே வதீதமென்ற
மாண்பருக்கு புகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்
வெல்லவே யவர்தமக்கு
வயதேதென்றால் வட்டகுறை தொட்டகுறை மிகுதியாமே
விளக்கவுரை :
5829. ஆமேதான் அவர்தமக்கு
வயதுமெத்த வப்பனே எண்ணூற்று சொச்சமாண்டு
நாமேதான் சொன்னபடி
குளிகைபூண்டு நலமான கேசரிமேல் சென்றசித்து
போமேதான்
வையகத்திலிருந்துமல்லோ பொங்கமுடன் சமாதிமுகஞ் சென்றசித்து
வேமேதான்
இருபத்தாறாண்டுமட்டும் விடுபட்டு பூமிதனில் வந்தசித்தே
விளக்கவுரை :
5830. வந்ததொரு சித்துக்கு
சமாதிமார்க்கம் வையகத்தில் மெத்தவுண்டு சொல்லொண்ணாது
சந்ததமாஞ் சீஷவர்க்கம்
கோடிமாண்பர் தாரிணியில் கணக்குண்டோ லக்கோயில்லை
சொந்தமுடன் வெகுமாண்பர்
கிட்டியல்லோ சுந்தரனார் பாதாரவிந்தந்தன்னை
அந்தமுடன் தாள்பணிந்து
சிரங்குனிந்து வன்புடனே போற்றிசெய்தசித்துமாச்சே
விளக்கவுரை :