5821. தானான சித்துக்கு
வயதேதென்றால் தன்மையுள்ள வருடமது நானூறாகும்
பானான காடுமலை தன்முகத்தில்
பாங்குடனே தான்திரிந்த சித்துவாகும்
கோனான குருக்கள்மார்
ரிஷிகள்தம்மை கொற்றவனார் தான்கண்டு வுரவுபேசி
மானான பொன்மாற்று அறியவென்று
மார்க்கமுடன் சென்றதொரு சித்துபாரே
விளக்கவுரை :
5822. பாரப்பா ஜோதியென்ற
முனிவர்தானும் பட்சமுடன் சமாதிமுகம் வுள்ளேசென்று
சீரப்பா
முப்பத்தாறாண்டுமட்டும் சிறப்புடனே வையகத்தை மறந்தசித்து
நேரப்பா தவசுநிலை தான்கடந்து
நேர்மையுடன் நேர்மையுடன் சமாதிவிட்டு வந்தசித்து
ஆரப்பா அறிவார்கள்
ஜோதிமார்க்கம் வப்பனே யானறிந்து சொல்லிட்டேனே
விளக்கவுரை :
[ads-post]
5823. சொல்லவே யின்னமொரு
மார்க்கம்பாரு தூய்தான பாலகனே என்னசொல்வேன்
வெல்லவே டமரகனார்
வயதேதென்றால் வுத்தமனே முந்நூற்றுச் சொச்சமாகும்
புல்லவே நெடுங்காலம்
வையகத்து புகழான மாண்பருடன் கூடியல்லோ
நல்லதொரு வதிஷ்டகரு
வித்தையெல்லாம் நலமுடனே செய்ததொரு டமரர்காணே
விளக்கவுரை :
5824. காணவே ஜெகஜால டமரகந்தான
காசினியில் அதீதவித்தை செய்தசித்து
பூணவே நீர்மேலே நடந்தசித்து
புகழான வாசியை நடத்துஞ்சித்து
தோணவே கூடுவிட்டு
கூடுபாய்ந்து தொல்லுலகில் வித்தைதனை செய்தசித்து
ஆணவங்கள் தானொடுங்கி
காயந்தின்று வன்புடனே வீற்றிருந்த சித்துதாமே
விளக்கவுரை :
5825. தானான டமரகனார் ஆடுஞ்சித்து தகமையுள்ள சாத்திரத்திற் சொல்லவில்லை
கோனான வாகாயந்தன்னின்மட்டும்
கொற்றவனார் கெடைகட்டி யாடுஞ்சித்து
பானான பரிதிமதி
தன்னைத்தானும் பக்குவமாய்த் திசைமாற்றிச் செய்தசித்து
மானான டமரகனார் சமாதிதன்னில்
மார்க்கமுடன் ஏகுதற்கு எண்ணினாரே
விளக்கவுரை :