போகர் சப்தகாண்டம் 5816 - 5820 of 7000 பாடல்கள்


போகர் சப்தகாண்டம் 5816 - 5820 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5816. தேசமாம் உபதேசம் பெற்றுக்கொண்டு தேற்றமுடன் காயாதி கற்பங்கொண்டு
வாசமது மலையனிலே இருந்துகொண்டு வகுப்பான சித்தரது வுளவாராய்ந்து
நேசமுடன் சமாதிக்கு ஏகவெண்ணி நெடுங்காலஞ் சீஷவர்க்க மாண்பரோடும்
பாசமொடு தனக்குகந்த சீஷனைத்தான் பட்சமுடன் கண்டறிந்து வுரைத்தார்தாமே

விளக்கவுரை :


5817. உரைத்தாரே சீஷவர்க்க சேதிதன்னை வுத்தமனே சமாதிக்குப் போரேனப்பா
வரையான சமாதிமுகஞ் சென்றபோது வளமுடனே எந்தனுக்கு வயிரக்கல்லால்
குறையாமல் சமாதிதனை மூடியல்லோ கொற்றவனே கருவயிரக்கல்லில்தானும்
மறைவாகக் கைநாட்டுச் சித்திரந்தான் மன்னவனே எழுத்துரையு மென்பார்தானே

விளக்கவுரை :

[ads-post]

5818. என்றவுடன் கௌபாலசித்துதாமும் எளிதான வயிரக்கல் மேலேயப்பா
வென்றிடவே எழுத்துமுகம் மாறியல்லோ மேதினியில் எல்லவர்க்கும் அறிவதற்கு
குன்றான கல்லின்மேல் எழுத்துவூன்றி கொற்றவனே கௌபாலர் சமாதியென்று
நன்றாக வரைதீட்டி சீஷர்தாமும் நலமுடனே சமாதிமுகஞ் செய்தார்பாரே

விளக்கவுரை :


5819. செய்யவே பதினான்கு வருஷமட்டும் செப்பரிய சமாதிமுகந்தனிலிருந்து
பையவே வையகத்தில் வந்தசித்து பாங்குடனே ஏமமென்ற சித்துவாகும்
துய்யதமிழ் பண்டிதர்கள் போற்றுஞ்சித்து துறையான ஏமமாற்றறிந்தசித்து
வையகத்தில் சித்துமுனி ரிஷிகள்தேவர் வளமுடனே எவரறிந்தார் ஆணிதானே

விளக்கவுரை :


5820. ஆணியா மின்னமொரு வதிதஞ்சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு
நீணிலத்தில் ஜோதிமாமுனிவர்தாமும் நீதியுடன் வெகுகாலமிருந்தசித்து
வாணிபங்கள் செய்வதற்கு ஏமமாற்றை வளமுடனே கண்டறிந்தசித்துதாமும்
காணிகளும் பூமிவளமெல்லாங்கண்டு கருவயிரக்கல்லெடுத்த சித்துதானே

விளக்கவுரை :



போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar