போகர் சப்தகாண்டம் 5811 - 5815 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5811 - 5815 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5811. உண்மையாங் குளிகையது தானுமில்லை வுத்தமனே நரைதிரையும் யாதொன்றில்லை
வண்மையாம் பிணியென்ற ரோகமில்லை வகுப்பான காயாதிதானுமில்லை
தண்மையுடன் வையகத்து மாண்பரெல்லாம் தப்பாமல் சிவயோகி என்பார்பாரு
திண்மையுடன் கோரக்கர் மூலிதம்மை தீர்க்கமுடன் எப்போதும் தின்பார்தானே

விளக்கவுரை :


5812. திண்பாரே கோரக்கர் மூலியாலே தீர்க்கமுடன் கோரக்கர் சித்துமாச்சு
வன்பாக சமுசார வாழ்க்கையில்லை வளமான பொருளின்மேல் ஆசையில்லை
என்னேரந் திரிகால பூசையோடும் எழிலான காவிகஷாயத்தோடும்
சொன்னபடி மனோன்மணியாள் பிரணவத்தை தொல்லுலகில் யெப்போதும் சொல்வார்தானே

விளக்கவுரை :

[ads-post]

5813. சொல்வாரே யின்னமொரு மார்க்கங்கேளு தூய்தான நற்பாலா தீரவானே
புல்லவே கௌபால சித்துதானும் புகழான வையகத்தில் இருந்தசித்து
வல்லதொரு பொன்னுக்கு வாணிமாற்று வகுப்புடனே கண்டறிந்த ஞானசித்து
சல்லியமாம் வித்தைதனில் தேர்ந்தசித்து சட்டமுடன் வுரைகல்லுக்குரியசித்தே

விளக்கவுரை :


5814. உரையான பொன்னுரைக்கும் கல்லைத்தானும் வுத்தமனே மலைதனிலே கண்டுதேடி
திரையோடும் புரையகற்றி வயிரக்கல்லை திட்டமுடன் ஆராய்ந்த ஞானசித்து
வரையான சித்துக்கு வயதேதென்றால் வளமுடனே கூறுகிறேன் இன்னங்கேளு
கரைகண்ட சித்தல்லோ கெவனசித்து கௌபால சித்தென்று பேருண்டாச்சே

விளக்கவுரை :


5815. பேரான சித்துக்கு வயதேதென்றால் பெருமையுடன் கூறுகிறேன் கொற்றவர்கேள்
நேரான வயததுவும் இருநாற்றைந்து நெடிதான காடுமலை திரிந்தசித்து
ஊரோடுங்கூடியல்லோ உறவுபேசி வுகமையுடன் சாத்திரத்தை யறிந்தசித்து
சீரான கௌபால சித்தருக்கு சிறப்புடனே ஞானமென்ற தேசந்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar