5806. சொல்லவே சமாதிமுகம்
நின்றபோது செம்மலுடன் சீஷவர்க்கம் அனேகங்கோடி
மெல்லவே சமாதிக்கு
இடமுந்தேடி மேன்மையுடன் வழிபாடு செய்துமல்லோ
புல்லவே கொங்கணனார்
முனிவர்தானும் புகழான சமாதிமுகம் வுள்ளேசென்று
வல்லமையாய் முப்பது
வாண்டுதானும் வளமுடனே இருந்த சித்துதானே
விளக்கவுரை :
5807. தானான யின்னமொரு
வயனஞ்சொல்வேன் தாக்கான கண்மணியே புகலக்கேளு
கோனான தட்சணா மூர்த்தியப்பா
குவலயத்தில் வெகுகால மிருந்தசித்து
மானான வயததுவும்
ஏதென்றாக்கால் மகத்தான வாயிரத்து சொச்சமப்பா
பானான படியேழு கடலுஞ்சுத்தி
பாரினிலே வுழன்றதொரு சித்துகாணே
விளக்கவுரை :
[ads-post]
5808. காணவே தட்சணாமூர்த்தியாகும்
காசினியில் திருமந்திரம் பாடினோர்தான்
பூணவே சிவாலயந் தன்னிலப்பா
பொங்கமுடன் வெகுகால மிருந்தசித்து
தோணவே திருமந்திரம்
பாடியல்லோ தோற்றமுடன் சமாதிக்கு யேகவெண்ணி
ஆணவங்கள் தானொடுங்கி
சித்துதாமும் வண்பான காசிபதி சென்றிட்டாரே
விளக்கவுரை :
5809. சென்றாரே நற்மதா நதியின்பக்கல் சிறப்புடனே தட்சணாமூர்த்திநாயர்
குன்றான கரையோரம்
மண்டபந்தான் கொற்றவனார் சமாதிமுகஞ் சென்றுமல்லோ
வென்றிடவே ஒருயுகமாம்
அறுபதாண்டு வுத்தமனார் தானிருந்துவந்தசித்து
தென்றிசையில் தட்சணாமூர்த்தி
யென்று தேசமதில் பேர்கொண்ட சித்துபாரே
விளக்கவுரை :
5810. பாரேதான் இன்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் பாங்கான பாலகனே பகரக்கேளு
நீரேதான் கோரக்கர்
வயதேதென்றாக்கால் நிஷ்களங்கமாகவல்லோ மாயாசித்து
சேரேதான் வயததுவும்
எண்பதாகும் செப்பினார் அவர்நூலில் சூத்திரந்தான்
சீரேதான் பதினாறு
சூத்திரத்தில் சிறப்பாகப் பாடிவைத்த துண்மையாமே
விளக்கவுரை :