5801. என்றவுடன் யாக்கோபு
தாள்பணிந்து எழிலான வார்த்தையது கூறும்போது
சென்றுமே யாக்கோபு
தன்னைக்கண்டு சிறப்புடனே சுன்னத்து செய்துமல்லோ
தின்றிடவே ரொட்டியது
தானுமீய்ந்து சிறப்புடனே யசேனுசேன் என்றுகூறி
வென்றிடவே யுபதேச பிரணவத்தை
விருப்பமுடன் மலுங்குமார் ஓதினாரே
விளக்கவுரை :
5802. ஓதவே நபிநாயர்
கூட்டத்தார்கள் வுத்தமர்கள் மனம்போலே மனதுவந்து
நீதமுடன் மக்கபுரி
கோட்டைக்குள்ளே நிஷ்களங்க பக்கிரியாக்கோபு தன்னை
தோதமுடன் கொண்டுசென்றார்
அரண்மணைக்குள் தோறாமல் கொத்துமா யோதினார்கள்
வீதமது பயனறிந்த சித்துதாமும்
விடுபட்டு வந்ததொரு யாக்கோபாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5803. ஆச்சப்பா யின்னமொரு
வயனம்சொல்வேன் வப்பனே கொங்கணவர் வயதுமார்க்கம்
பாச்சலுடன் எண்ணூறு
வாண்டுமட்டும் பாரினிலே இருந்ததொரு சித்துமாகும்
மாச்சலுடன் சமாதிமுகஞ்
சென்றசித்து மகத்தான கொங்கணவர் சித்துமாகும்
ஓச்சலது இல்லாமல்
வுலகுதன்னில் வுத்தமனே வெகுகாலம் வுழன்றசித்தே
விளக்கவுரை :
5804. சித்தான சித்துமுனி ரிஷிகள்
தாமும் சிறப்பான கொங்கணவர் காண்டஞ்சொல்லி
முத்தான கடைக்காண்டம்
மூன்றுஞ்சொல்லி மூதுலகில் சமாதிக்கு ஏகலானார்
பத்தியுடன் கடைக்காண்டம்
நூலிலப்பா பாடிவைத்தார் வெகுசங்கைக் காணப்போமோ
புத்தியுள்ள மாண்பர்களும்
காண்பாரப்பா கண்டாலும் மதிசங்கை யின்னமுண்டே
விளக்கவுரை :
5805. உண்டான கடைக்காண்டம்
பாடியல்லோ வுத்தமனுங் கொங்கணவர் முனிவர்தானும்
நண்பான வையத்தில்
மாண்பர்முன்னே நலமான ரிஷிமுனிவர் தனையழைத்து
வண்பான சாத்திரங்கள்
பாடியல்லோ வளமுடனே வெகுசித்தர் மறைத்துவைத்தார்
திண்ணமுடன் காயாதி
கற்பங்கொண்டு தீரமுடன் சமாதிக்குச் சொல்வேன்தானே
விளக்கவுரை :