5796. முறையான கருவிகரணாதியெல்லாம்
முயற்சியுடன் தாமறிந்தமாயாசித்து
கறைபோன்ற பதினென்பேர்
சாத்திரத்தை கருத்தினிலே எந்நாளும் மனதுவந்து
மறைவான பொருளெல்லாம்
மாண்பருக்கு மகத்தான முறைப்பாடு யாவுங்கண்டு
குறையாமல் உபதேசஞ்
செய்தசித்து கொற்றவனார் தேறைய முனிவர்தாமே
விளக்கவுரை :
5797. முனியான தேரையமுனிவரப்பா மூர்க்கமுடன் சங்கமென்ற சபையிற்சென்று
தனியாக வகஸ்தியரின்
பின்தொடர்ந்து சட்டமுடன் பிணிதீர்க்க சித்துவாகும்
பனிபோன்ற வனாந்திரத்தில்
இருக்கும்மூலி பாங்கான சஞ்சீவி மூலிதன்னை
மனிதர்களை தானெழுப்பு
மமுர்தமூலி மார்க்கமுடன் கண்டறிந்த சித்துபாரே
விளக்கவுரை :
[ads-post]
5798. பாரப்பா யேமமென்ற
வித்தைதன்னை பண்புடனே மனதுவந்து கண்டசித்து
ஆரப்பா யிவர்போலுஞ்
சித்துமுண்டோ வவனிதனில் ஆரேனுங் கண்டதில்லை
நேரப்பா யேமமென்ற
சித்தேயாகும் நெடிதான மலையனைத்தும் பழுக்குஞ்சித்து
சீரப்பா வையகத்தில்
நெடுநாளாக சிறப்புடனே தானிருந்த சித்துமாமே
விளக்கவுரை :
5799. தாமேகேள் இன்னமொரு மார்க்கஞ்
சொல்வேன் தயவான பாலகனே மைந்தாபாரு
போமேதான் பக்கிரி
யாக்கோபுவென்றும் பொங்கமுடன் சாத்திரத்தின் உரைத்தவார்போல்
நேமமுடன்
வயததுவுமேதென்றாக்கால் நிலையான வாண்டதுவும் இருநூற்றுச்சொச்சம்
நாமமுடன் நபிநாயன்
தன்னைக்காண நன்னயமாய் மக்கபுரி போனார்தாமே
விளக்கவுரை :
5800. போனாரே மலைநாடு குகைகடந்து
பொங்கமுடன் நபிதனையே காணவென்று
கானாறு பாதவழி செல்லும்போது
கடுங்காளை நபிக்கூட்டம் மிகவாய்க்கண்டு
மானான மகதேவர் பதியிலப்பா
மார்க்கமுடன் வந்ததினால் உந்தமக்கு
தீனான தீன்பதியில்
உந்தனைத்தான் திட்டமுடன் சபித்திடுவோம் என்றிட்டாரே
விளக்கவுரை :