5791. தவசியென்றால் மாண்பருக்கு
உகந்தசித்து தாரணியில் சமுசார வாழ்க்கையோடும்
பவக்கடலைத் தானொழித்துப்
பாரின்மீது பட்சமுடன் தானிருந்த கொடியசித்து
தவப்பெருமை கொண்டல்லோ
ரிஷிகளோடும் தயங்காமல் அரசர்முதல் வணங்குஞ்சித்து
நவகண்ட வையகமும்
அறிந்தசித்து நலமான வியாசமுனி யென்றசித்தே
விளக்கவுரை :
5792. முனியான சித்துமுனி
வியாசர்தாமும் மூதுலகில் பெருமைதனை யறிந்தசித்து
கனிவோடும் பாலோடும்
ரிஷிகள்தம்மை கண்ணினால் கண்டறிந்த சித்துவாகும்
பனிபோன்ற மலைநாடு
பார்த்தறிந்து பட்சமுடன் சென்றல்லோ வுபதேசங்கள்
தனியாகத் தானிருந்து
பிரணவத்தை தண்மையுடன் தானறிந்த சித்துதானே
விளக்கவுரை :
[ads-post]
5793. தானான சித்துக்குச்
சமாதியில்லை தாரணியில் வெகுகால மிருந்தசித்து
கோனான குருக்கள்
மகாரிஷிகள்தேவர் கொற்றவனார் சீஷவர்க்க மாண்பர்தன்னை
மானான வையகத்தி அறிந்தசித்து
மகத்தான வியாசமுனி சித்துபோல
தேனான வேதமதை யறிந்தசித்து
திறைகடலிற் கண்டதுண்டோ வுண்மைதானே
விளக்கவுரை :
5794. உண்மையிது இன்னமொரு
மார்க்கங்கேளு வுத்தமனே புலிப்பாணி மைந்தாபாரு
வண்மைபெறுந் தேரையர்
என்னுஞ்சித்து வளமான ரோகமதைத் தீர்க்குஞ் சித்து
நன்மைபெற வயததுவும்
ஏதென்றாக்கால் நாதாந்த சித்துமுனி கும்பயோனி
உண்மையுடன் எழுதிவைத்த
சாத்திரத்தில் தீர்க்கமுடன் வயதுமுந்நூறென்னலாமே
விளக்கவுரை :
5795. என்னவே வயததுவும்
முந்நூறாண்டு யெழிலான தேறையர் முனிவருக்கு
பன்னவே சாத்திரத்தின்
வகுப்பைப்போல பட்சமுடன் கண்டறிந்து சொல்லலாச்சு
துண்ணவே யிவர்தமக்கு
சமாதியில்லை துப்புரவாய் ஜெகத்தாசை விட்டோர்தாமும்
முன்னவே யகஸ்தியனார்
உபதேசங்கள் முறைப்படியே கண்டறிந்த சுற்றுமாச்சே
விளக்கவுரை :