போகர் சப்தகாண்டம் 5786 - 5790 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5786 - 5790 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5786. சித்தான புலஸ்தியருஞ் சமாதிக்கேக சிறப்பான தேரணமா முனிவர்தம்மை
பத்தியுடன் சீஷவர்க்கம் கொண்டுமல்லோ பாருலகில் சமாதிக்கேகவென்று
முத்திபெற சின்மயத்தை மனதிலெண்ணி மூதுலகில் சமாதிக்கு செல்கவென்று
சத்தியமாய் பவக்கடலை யொழித்துமல்லோ சட்டமுடன் சமாதிமுக மேகினாரே

விளக்கவுரை :


5787. ஏகவே வையகத்தில் சமாதிதன்னில் எழிலாக முப்பதுவாண்டுமட்டும்
போகமென்னும் அத்வீத நிலையில்நின்று பொங்கமுடன் தானிருந்த மாயாசித்து
பாகமுடன் தேரணமா முனிவர்தன்னால் பாருலகில் மறுபடியும் வந்தசித்து 
சாகமது வாராமல் அறுநூற்றுச்சொச்சம் சாங்கமுடன் வையகத்தில் இருந்தார்பாரே

விளக்கவுரை :

[ads-post]

5788. பாரேதான் யின்னமொரு வயனஞ்சொல்வேன் பண்பான எந்தனது நேசபாலா
சீரேதான் வேதமென்ற வியாசரப்பா சிறப்புடனே வெகுகாலங் கடந்தசித்து
கோரமென்ற வயததுவும் ஆயிரத்துச் சொச்சம் குவலயத்தில் வேதமதை யறிந்தசித்து
தீரமுடன் நூலாதி நூல்களெல்லாம் திறைகடல் போலுண்டதொரு சித்துகாணே

விளக்கவுரை :


5789. காணவே வனாந்திரங்கள் குகைகள்நாடு கருவான மலையாறு குண்ணுதானும்
வேணதொரு வண்டர்முனி கூட்டத்தார்கள் வெளிகாணா காடுமுதல் உறைந்தசித்து
நீணவே சமயமென்ற மார்க்கந்தன்னை நேர்மையுடன் துகைபாடு செய்தசித்து
மாணமருங் கல்விதனி லுறைந்தசித்து மகத்தான மாண்பருக்கு உகந்தசித்தே 

விளக்கவுரை :


5790. மாண்பான வையகத்து ஜனங்களுக்கு மார்க்கமுடன் வேதமதை யோதும்சித்து
ஆண்மையுடன் சாத்திரங்கள் புராணமெல்லாம் அவரவர்க்கு உகந்தபடி செய்துவைத்தேன்
தாண்மைபெற சைவாதி சமயமெல்லாம் தாரணியில் கொடிநாட்டி இருந்தசித்து
நீண்மையுடன் காயாதி கற்பங்கொண்டு நெடுங்கால மிருந்ததொரு தவசியாச்சே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar