5781. ஆமப்பா புலிப்பாணி மைந்தாகேளு வப்பனே யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன்
போமப்பா நந்தியுட
மார்க்கந்தன்னை புகலுகிறேன் வயததுவும் ஏதென்றாக்கால்
நாமப்பா வயததுவும்
எழுநூறாண்டு நலமான வெகுகால மிருந்தசித்து
வேரப்பா சமாதிமுகங்
கண்டசித்து வேதாந்த நந்தியென்று சொல்லலாச்சே
விளக்கவுரை :
5782. சொல்லவென்றால்
நாவில்லைபாவுமில்லை சுந்தரனார் யுகங்கடந்த நந்திமூர்த்தி
வெல்லவே மலையடியாம்
வாரந்தன்னில் வேண்டியே சமாதிமுகமிருந்தசித்து
புல்லவே
சீஷவர்க்கமில்லாமற்றான் பூதலத்தில் வெகுநாளாய் இருந்தார்தாமும்
நல்லதொரு தேவதா
ஸ்தலங்கள்தன்னில் நலமுடனே நந்தியென்ற பேருண்டாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5783. உண்டாச்சு சித்துமுனி
பாலனுக்கு வுற்றதொரு நந்திமுகந்தாமாச்சு
கண்டதொரு மாண்பரெல்லாம்
ஆலயத்தில் கருத்தினிலே முன்னின்ற நந்தியென்று
அண்டர்முனி ராட்சதரும்
ரிஷிகள்தாமும் அந்தரதுந்துபிமுதலுந் தேவரானோர்
மண்டலத்தில் தேவதா
ஸ்தலங்கள்தன்னில் மகத்தான நந்தியென்று மதித்திட்டாரே
விளக்கவுரை :
5784. மதிக்கவே இன்னமொரு
மார்க்கங்கேளு மகத்தான புலஸ்தியரின் வண்மைசொல்வேன்
துதிக்கவே வகஸ்தியனார்
வாசம்பெற்ற துடியான புலஸ்தியனார் என்னலாகும்
விதிப்படியே கமலமுனி
கோத்திரத்தில் வித்தகராய் வந்துதித்த முனிவர்தாமும்
கதிபெறவே யகஸ்தியனார்
பாகம்பெற்று காசினியில் வந்துதித்த சித்துமாச்சே
விளக்கவுரை :
5785. ஆச்சப்பா புலஸ்தியரின்
வயதேதென்றால் வப்பனே யறுநூற்று அறுபதாகும்
மூச்சடங்கி பிரணவத்தை
மாறிமாறி மூதுலகில் வெகுகால மிருந்தசித்து
பேச்சசியாமாவின் சித்துவப்பா
பேரின்பநிலைதனையே துறந்தசித்து
நீச்சனெனும்
பஞ்சமரோடிருந்தசித்து நெடுங்கால வையகத்து சித்துமாச்சே
விளக்கவுரை :

