போகர் சப்தகாண்டம் 5776 - 5780 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5776 - 5780 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5776. இட்டதொரு புண்ணாக்கு மீசர்தாமும் எழிலான திருவாத்தின் மரத்தின்கீழே
சட்டமுடன் திருப்பொந்தி லிருந்துகொண்டு சாங்கமுடன் சிவயோகஞ் செய்துமல்லோ
திட்டமுடன் சிலநாட்கள் கழிந்தபின்பு தீர்க்கமுடன் மரப்பொந்தில் அயிக்கியமாகி
பட்டமரந் துளுத்தல்லோ வையகத்தில் பட்சமுடன் மாண்பருக்கு குருவுமாச்சே

விளக்கவுரை :


5777. குருவான திருவாத்தி மரத்தையப்பா கொற்றவனே வையகத்து மாண்பரெல்லாம்
திருவான ரோகமது கண்டபோது தீர்க்கமுடன் மரத்துக்குக் காப்புகட்டி
சருவான சருகுவகை கியாழமிட்டு சட்டமுடன் தானருந்தி ரோகந்தீர்ந்து
பெருமையுடன் வையகத்தில் புனிதவானாய் பேருண்டாய் வெகுநாளாய் வாழ்ந்தார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

5778. வாழ்ந்தாரே யின்னமொரு மார்க்கங்கேளு வகுப்பான புலிப்பாணி மைந்தாபாரு
ஆழ்ந்தவே காலாங்கி கடாட்சத்தாலே வப்பனே வேங்கைதனி லேறிக்கொண்டு
தாழ்ந்திடவே ஜலந்திரட்டி புனிதவானும் சாங்கமுடன் தாரிணியில் சுற்றிவந்தோன்
மூழ்ந்திடவே வெகுகோடி காலமப்பா மூதுலகில் இழிந்ததொரு சித்துபாரே

விளக்கவுரை :


5779. பாரப்பா புலிப்பாணி பாலனான பட்சமுடன் உந்தனுக்கு வயதுசொல்வேன்
ஆரப்பா வயததுவும் அறுநூறாண்டு வப்பனே வையகத்திலிருந்தசித்து
நேரப்பா சமாதிமுகஞ் சென்றதில்லை நேர்மையுடன் நெடுங்கால மிருந்தசித்து
சீரப்பா சிவயோகந் தன்னிற்சென்று சிறப்புடனே சின்மயத்தி லிருந்தசித்தே

விளக்கவுரை :


5780. இருந்துமே வெகுகாலமானசித்து எழிலாக எந்தனிட வுபதேசங்கள்
பொருந்தவே தானடைந்து புனிதனாவாய் பொங்கமுடன் வையகத்தி லிருந்தசித்து
திருந்தவே மலைகுகைகள் வனாந்திரங்கள் தீரமுடன் கண்டறிந்த சித்துவாகும்
கருந்தமிழும் செந்தமிழும் கலந்தசித்து காசினியில் உபவாசச் சித்துமாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar