5771. சித்தான சித்துமுனி
நாதருக்கு சிறப்பான வாசானாம் பாம்பாட்டியாகும்
சத்தான வையகத்தில்
சிலதுகாலம் சாங்கமுடன் அறியாத வாலிபத்தில்
சுத்தமுடன் அரிபூசை
சிவனார்பூசை சுந்தரனார் எந்நேரஞ் செய்துகொண்டு
கத்தனே கோபாலா கோபாலா வென்று
காசினியில் வாய்ப்பினத்தித் திரிவார்பாரே
விளக்கவுரை :
5772. பாரேதான் மாண்பர்களைக்
கண்டபோது பாலகனார் வாய்திறந்து யாருங்கேளார்
நேரேதான் பசிவந்து வுற்றபோது
நேர்மையுடன் கோபாலா வென்றசத்தம்
வீரேதான் வீரிட்டு சபதமிட்டு
விண்ணுலகைக் கண்திறந்துபார்க்கும்போது
ஆறோதான் தேவாதி வரத்தினாலே
வப்பனே பால்பழமுந் தருவார்தானே
விளக்கவுரை :
[ads-post]
5773. தானான பால்பழமுமுண்டபின்பு தாக்கான வழிதடங்கள் காணமாட்டார்
கோனான பாம்பாட்டி
தனைநினைந்து கொற்றவனார் நடுவீதி பள்ளிகொள்வார்
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தேசமெல்லாந் தான்திரண்டு வந்திப்பார்கள்
மானான புண்ணாக்கர்
கண்திறந்து மகத்தான கோபாலா யென்பார்தானே
விளக்கவுரை :
5774. என்னவே புண்ணாக்கு
ஈசர்தாமும் யெழிலான மண்ணதனைத் தானெடுத்து
உன்னிதமாய் மாண்பருக்குத்
தான்கொடுப்பார் வுத்தமனே மண்ணதுவுந் தித்திப்பாகும்
பன்னவே நோயாளி யார்வந்தாலும்
பட்சமுடன் மண்கிள்ளித்தான்கொடுப்பார்
சொன்னபடி நோயாளி
ரோகந்தீர்ந்து சுத்தமுடன் போவார்கள் மெத்தவுண்டே
விளக்கவுரை :
5775. உண்டான மாண்பருக்கு
புண்ணாக்கீசர் வுத்தமனே பிரிதிவென்ற மண்ணைத்தானும்
வண்மையுடன் தான்கொடுத்து
வியாதிரோகம் வளமையுடன் தான்தீர்ப்பார் அதீதமெத்த
திண்மையுடன் சிலகாலஞ்
சென்றபின்பு தீர்க்கமுடன் வயததுவும் நூறாண்டாச்சு
கண்மையுடன் வையகத்தி
லிருக்கலாகா தற்பரனைக் காணவெண்ணி நினைத்திட்டாரே
விளக்கவுரை :

