போகர் சப்தகாண்டம் 5766 - 5770 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5766 - 5770 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5766. சென்றாரே புஜண்டரெனும் சித்துதாமும் சிறப்புடனே சமாதிமுகஞ் சென்றபோது
குன்றான மலைமீதிற் கூடிருந்த குறிப்பான மானதுவும் மனதுவந்து
வென்றிடவே ரிஷியாரின் சித்துபாதம் வெகுநாளாய் தான்வளர்த்த சாபத்தாலே
அன்றுமே கூடிருந்த மான்தானப்பா வப்பனே சமாதிமுகஞ் செல்லலாச்சே  

விளக்கவுரை :


5767. ஆச்சப்பா சமாதிமுகஞ் சென்றபோது வப்பனே சீஷவர்க்க மாண்பர்தானும்
மூச்சடங்கிப்போனதொரு புஜண்டரப்பா முனையான வையகத்தில் வருவதில்லை
பாச்சலுடன் சமாதிமுகம் மூடியல்லோ பண்பான பாறைகொண்டு யேகியல்லோ
வீச்சலுடன் மாண்பரெல்லாம் வெளியேகிவிட்டாரே கோடிதளங்காணலாச்சே

விளக்கவுரை :

[ads-post]

5768. காணவே யின்னமொரு கருமானங்கேள் காசினியில் கருவூரார் என்றசித்து  
தோணவே நடேசரென்னும் கருவுண்டாகி துப்புரவாய் பாண்டியனுக் கருளுந்தந்தார்
பூணவே பாண்டியன் தேவாலயத்தில் பொங்கமுடன் நடேசரைத்தான் செய்துவைத்தேன்
தோணவே காயாதி கற்பங்கொண்டு தொல்லுலகில் வெகுகால மிருந்தசித்தே

விளக்கவுரை :


5769. சித்தான கருவூரார் என்றசித்து சின்மயத்தில் பேரின்பங்கொண்டசித்து
முத்தான வயததுவும் முந்நூராண்டு மூதுலகில் பாண்டியனுக்குகந்தசித்து
பத்தியுடன் சிதம்பரமாம் தேவஸ்தானம் பட்சமுடன் நிர்மித்த ஞானசித்து
சத்தியெனும் மடாலயங்கள் உண்டுபண்ணி சாங்கமுடன் சமாதிமுகஞ் சென்றசித்தே

விளக்கவுரை :


5770. சென்றதொரு சித்துமுனி மார்க்கங்கேளு செயலான புண்ணாக்கு ஈசரப்பா
தென்றிடவே வயததுதான் நூற்றிரண்டுபத்து விருப்பமுடன் மரப்பொந்தில் இருந்தசித்து
குன்றுமலை குளிகையதுயனியாச்சித்து கோபாலா கோபாலா வென்னுஞ்சித்து
தென்றிசையில் வடகோடி கானகத்தில் திருவாத்தின் மரத்தின்மேலிருந்தசித்தே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar