5761. தானான பிரகாசமானஜோதி
தண்மையுள்ள சிவவாக்கிய புனிதவானே
கோனான குருநாதர்
கடாட்சத்தாலே கொற்றவனே சமுசார வாழ்க்கைவேண்டி
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தேற்றமுடன் இல்வாழ்க்கை கேட்டீரப்பா
மானான யில்வாழ்க்கை
கேட்டதாலே மன்னவனே இப்போது செய்யலாமே
விளக்கவுரை :
5762. செய்யவே சந்தோஷங்
கொண்டுமல்லோ சிறப்புடனே மனதுவந்து மனம்நொடிந்தார்
துய்யவே சிவவாக்கியர்
பெயருண்டாக துப்புரவாய் சிவானந்தர் பிறந்தார்தாமும்
வெய்யவே எண்பத்தோர்
ஆண்டுமட்டும் விருப்பமுடன் சிவவாக்கியர் தாமிருந்து
வையகங்கள் தான்புகழ
சமாதிமார்க்கம் வளமுடனே யிறங்கியதோர் வளமைபாரே
விளக்கவுரை :
[ads-post]
5763. பாரேதான் இன்னமொரு
மார்க்கங்கேளு பாங்கான புலிப்பாணி மன்னாபாரு
நேரேதான் ராமரெனுந் தேவரப்பா
நேர்மையுடன் வெகுகாலமிருந்தசித்து
சேரேதான் வயததுவும்
இருநூறாண்டு செம்மலுடன் சமாதிமுகம் சென்றசித்து
கூரேதான் மூன்றுமுறை
வையகத்தில் குறிப்புடனே சமாதிமுகம் போனார்காணே
விளக்கவுரை :
5764. காணவே யின்னமொரு
மார்க்கங்கேளு கருவான புஜண்டருட வயதுமார்க்கம்
தோணவே முந்நூறு வறுபதாண்டு
தோறாமல் குகைதனிலே இருந்தசித்து
பூணவே சமாதிமுகம் ஏறவில்லை
பொங்கமுடன் முந்நூற்றி அறுபதாண்டு
வேணபடி வையகத்து வதிசயங்கள்
விருப்பமுடன் யான்கண்டேன் வனேகந்தானே
விளக்கவுரை :
5765. தானேதான் சித்தர்முனி புஜண்டர்தாமும் தண்மையுள்ள சீஷவர்க்கம் தனையழைத்து
சோனையிலே எந்தனுக்கு
சமாதிபூண சுத்தமுடன் சுரங்கமது செய்யவென்ன
ஆனையள வாகவல்லோ
சுரங்கஞ்செய்து வண்புடனே மனதுவந்து கூறலுற்றார்
மானையவர் கைபிடித்து
சுரங்கந்தன்னில் மார்க்கமுடன் சாரலிடஞ் சென்றிட்டாரே
விளக்கவுரை :

