போகர் சப்தகாண்டம் 5756 - 5760 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5756 - 5760 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5756. தானான யின்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
கோனான எனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் எந்தனுக்கு சொன்னநீதி
தேனான மனோன்மணியாள் கடாட்சத்தாலே தேஜொளிவின் மயங்கொண்ட கும்பயோனி
பானான பராபரத்துக்கொப்பதான பாருலகில் அகஸ்தியரைப் பகருவேனே

விளக்கவுரை :


5757. பகருவேன் அகஸ்தியருக்கு வயதேதென்றால் பட்சமுடன் துகைகணக்குக் கூறொண்ணாது
நிகரமுடன் சொல்வதற்கு யாராலாகும் நீதியுடன் நூல்தனிலே யுரைத்தமார்க்கம்
அகரமென்ற வட்சரமும் அவராலாச்சு வப்பனே நாலுயுகங் கடந்தசித்து
சகரமெலாந் தான்துதிக்கும் கும்பயோனி சதுரான வகத்தியர் என்றமையலாமே

விளக்கவுரை :

[ads-post]

5758. அறையலாம் வெகுகோடி காலமப்பா வப்பனே சமாதிமுகம் இருபத்தொன்று
நிறையவே சமாதிமுகம் வையகத்தில் நேர்மையுடன் தானிருந்த சித்துமாகும்
குறையவே வயததுதான் சொல்வதற்கு குவலயத்தில் முடியாது ஒருவராலும்
மறையவே நூல்தனிலே காண்பதற்கு மகத்தான தயததுவும் இல்லைதானே

விளக்கவுரை :


5759. இல்லையே இன்னமொரு மார்க்கங்கேளு எழிலான புலிப்பாணி மைந்தாபாரு
தொல்லுலகம் புகழுஞ் சிவவாக்கியர்தாமும் தோறாத வையகத்தில் வெகுநாளப்பா
புல்லவே சமுசார வாழ்க்கைவேண்டாம் புகழான வன்பத்தோராண்டுமட்டும்
வெல்லவே சமுசார வாழ்க்கையற்று வெகுநாளாயிருந்ததொரு சித்துமாச்சே 

விளக்கவுரை :


5760. ஆச்சப்பா வெகுகால வருஷமாக வப்பனே சமுசார வாழ்க்கையற்று
மூச்சடங்கி மடந்தனிலே இருந்தசித்து மூர்க்கமுடன் சமுசாரம் வேண்டியல்லோ
பாச்சலுடன் தாய்தந்தை சீர்பாதத்தை பணிந்துமே மனதுவந்து கேட்டார்தாமும்
மாச்சலுடன் தாய்தந்தை மனங்களித்து மார்க்கமுடன் மகன்தனையே கேட்டார்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar