5751. ஏகவே சட்டமுனி வாறேதென்றால்
யெழிலாக எண்ணூறு வாண்டுமட்டும்
போகவே சமாதிமுகம்
மூன்றுமுறைதானும் பொங்கமுடன் பூமிதனில் இருந்துமல்லோ
சாலமுடன் வெகுகால
மிருந்தசித்து சாங்கமுடன் சீஷவர்கமுபதேசங்கள்
ஆகமங்கள் ஓதியல்லோ
இருந்தசித்து வப்பனே யோகமாசித்துமாமே
விளக்கவுரை :
5752. ஆமேதான் இன்னமொரு
மார்க்கங்கேளு வப்பனே இடைக்காடர் வரலாறு சொல்வேன்
போமேதான் வெகுகால
மிருந்தசித்து பொங்கமுடன் காயாதி கற்பங்கொண்டு
நேமமுடன் நிஷ்டையது
பூண்டுகொண்டு நெடுங்காலம் நூறாண்டும் இருந்தசித்து
வாமமுடன் தேவதா சாபத்தாலே வையகத்தில்
இருந்ததொரு சித்துவாச்சே
விளக்கவுரை :
[ads-post]
5753. ஆச்சப்பா தன்வந்திரி
வயதுமார்க்கம் வப்பனே சொல்லுகிறேன் மன்னாகேளு
பாச்சலுடன் வயததுதான்
எண்ணாறுண்டு பாங்குடனே சமாதிமுகங் கொண்டசித்து
மூச்சடங்கி தன்வந்திரி
பகவான்தானும் மூன்றுமுறை சமாதிதனி லிருந்தசித்து
மின்னவே காலாங்கி
நாதர்தம்மின் விருப்பமுடன் உபதேசங் கொண்டசித்தே
விளக்கவுரை :
5754. என்னலாம் வெகுகோடி
மாண்பர்மெச்சும் எழிலான தன்வந்திரி பகவான்தானும்
பன்னவே மூலத்தின் ஈசரப்பா
பாங்கான வயததுதான் ஏதென்றாக்கால்
துன்னவே இருநூறுவாண்டுமாகும்
துப்புரவாய் பூமிதனில் இருந்தசித்து
மின்னவே காலாங்கி
நாதர்தம்மின் விருப்பமுடன் உபதேசங்கொண்ட சித்தே
விளக்கவுரை :
5755. சித்தான சித்துமுனி
மூலத்தீசர் சிறப்பான மலைதனிலே இருநூறாண்டு
சத்தியுடன் பூசையது
செய்துமல்லோ சாங்கமுடன் மலைதனிலே அயிக்கியமாகி
வித்தகனார் சீஷவர்க்க
மாண்பரோடும் விருப்பமுடன் சுனைதனிலே இறங்கினார்பார்
சத்தபரிசங்களற்று தரணிமீதில்
சாங்கமுடன் தானிருந்தார் சிலநாள்தானே
விளக்கவுரை :

