போகர் சப்தகாண்டம் 5746 - 5750 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5746 - 5750 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5746. கண்டேனே வெகுகோடி சித்துதம்மை காலாங்கி நாதருட கிருபையாலே
கொண்டதொரு வையகத்து வதிசயங்கள் கொற்றவனே யடியேனுந்தானறிந்து
உண்டான வுளவுபதி மார்க்கமெல்லாம் வுத்தமனே கண்டல்லோ மிகவாராய்ந்து
பண்டிதங்கள் மிகப்பார்த்து பலநூல்சேதி பாங்குடனே சீனபதிக் குறைத்திட்டேனே

விளக்கவுரை :


5747. உரைத்தேனே சீனபதி மாண்பருக்கு வுத்தமனே லோகவதிசயங்களெல்லாம்
வுரைத்தேனே சீனபதிப் பெண்களுக்கு வகுப்பான சித்துமுனி ரிஷிகள் மார்க்கம்
திரைகடல்சூழ் அஷ்டாங்க யோகமெல்லாம் திரட்டினேன் போகரேழாயிரந்தான்
புரையொன்றும் நேராமல் புகழ்ந்தநூலாய் புகட்டினேன் சீனபதிமாண்பருக்கே

விளக்கவுரை :

[ads-post]

5748. மாண்பான புலிப்பாணி மைந்தாகேளு மகத்தான வையகத்தில் முந்நூறாண்டு
ஆண்மையுடன் நானிருந்தேன் அதிசயங்கள் வப்பனே யான்கண்டவாறுமட்டும்
வீண்போகாக் காலமது சாத்திரத்தின் வீரானவுளவு நிதானங்கள்கண்டு
தாண்மையுடன் யானுரைப்பேன் இதிகாசங்கள் சட்டமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளே

விளக்கவுரை :


5749. கேளேதான் ரோமரிஷி வயதுமார்க்கம் கெவனமுடன் சொல்லுகிறேன் பண்பாய்க்கேளு
நாளேதான் போகாமல் ரோமர்தாமும் நலமுடனே சமாதிமுகஞ் சென்றுமல்லோ
ஆளேதான் வருஷமது வையகத்தில் வப்பனே தானிருந்து வெளியுமாகி
பாளேதான் போகாமல் வருஷமறுநூறு பாங்குடனே வீற்றிருந்த சித்துமாமே

விளக்கவுரை :


5750. சித்தான மச்சமுனி வாறேதென்றால் சிறப்பான வையகத்தி லிருந்தசேதி 
பக்தியுடன் முந்நூறு வாண்டுமட்டும் பகவானைத்துதிசெய்து காயங்கொண்டு
முத்தியுடன் சமாதிக்குச் சென்றுமல்லோ மூர்க்கமுடன் மூவாண்டு சமாதிபூண்டு
கத்தனையே தானினைத்து கைலைதன்னில் காசினியை விட்டுமல்லோ யேகினாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar