போகர் சப்தகாண்டம் 5741 - 5745 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5741 - 5745 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5741. நிகழ்த்துவேன் காலாங்கி நாதர்தம்மை நெடுங்கால செய்தியெலாம் நிகழ்த்துவேன்யான்
புகழான காலாங்கி நாதர்தாமும் விண்ணியனார் வெகுகால மிருந்தசித்து 
அகந்தனிலே மூன்றுயுகஞ் சமாதிசென்று வப்பனே முயற்சியுடன் வந்தசித்து
ஜெகந்தனிலே சீனபதி தேசந்தன்னில் சிறப்புடனே குளிகைகொண்டு போனசித்தே

விளக்கவுரை :


5742. சித்தான காலாங்கி நாதர்தானும் சிறப்புடனே சீனபதி தன்னிற்சென்று
முத்தான காலனது வருளும்பெற்று முனையான சமாதிதனில் இறங்கியல்லோ
சத்தமுடன் அசரீரி வாக்கினோடும் தாரணியில் சமாதிமுகம் இருந்துகொண்டு
பத்தியுடன் சீனபதிமாண்பருக்கு பலகாலுந் தரிசனைகள் புரிகுவாரே

விளக்கவுரை :

[ads-post]

5743. புரிகுவார் வயதினுட மார்க்கந்தன்னை புகலுவேன் காலாங்கி நாதருக்கு
சரியுடனே மூவாயிரஞ் சொச்சமப்பா சங்கமுடன் வயதுதான் என்னலாகும் 
குறியான வருடமது மூவாயிரந்தான் குறிப்புடனே மகாநூலிற் சொன்னநீதி
நெறியுடனே வையகத்திலிருந்துமல்லோ நேர்மையுடன் சமாதிமுகம் சென்றார்தானே

விளக்கவுரை :


5744. தானான போகரிஷி மார்க்கஞ் சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாகேளு
கோனான யெனதையர் காலாங்கிநாதர் குறிப்புடனே எந்தனுக்குச் சொன்னநீதி
பானான வயததுவும் முந்நூரென்று பான்மையுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
தேனான குளிகையது பூண்டுகொண்டு தேசமெலாஞ் சுற்றிவந்தேன் காலந்தானே

விளக்கவுரை :


5745. காலமாம் வெகுகால மடியேன்தானும் காலாங்கி நாதருட கிருபையாலும்
கோலமுடன் திருக்கமலம் வீற்றிருக்கும் கொம்பனையாள் மனோன்மணியாள் கிருபையாலே
ஆலகால முடையதொரு வரன்பாகத்தில் வப்பனே வையகத்தில் யானுமல்லோ 
தாலமெலாஞ் சுத்திவந்து யடியேன்தானும் தாரணியில் சித்துமுனி ரிஷிகண்டேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar