போகர் சப்தகாண்டம் 5736 - 5740 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5736 - 5740 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5736. பாரேதான் சண்டேசர் ஜாதிமார்க்கம் பாங்கான வள்ளுவனார் என்றேயாகும்
நேரேதான் தலைமுறைகள் ஒன்றுபத்து நேர்மையுடன் அவர்நூலில் சொன்னநீதி
சீரேதான் சித்தர்முனி ரிஷிகள்தேவர் சிறப்புடனே பாடிவைத்த நூலைக்கண்டு
பேரேதான் வேர்பிரித்து பகுத்துயானும் பேரின்ப நிலைநின்று பாடினேனே  

விளக்கவுரை :


5737. பாடினேன் இன்னமொரு மார்க்கங்கேளு பாலகனே புலிப்பாணி மைந்தாபாரு
நாடியே திருமூல வர்க்கத்தார்கள் நலமான ஜாதியது மரபேதென்றாக்கால்
தேடியே வேளாள ஜாதியாகும் திருக்கூட்ட மெத்தவுண்டு சொல்லொண்ணாது
ஆடியதோர் தலைமுறைகள் ஏதென்றாக்கால் வப்பனே ரெண்டுபத்து வொன்றுதானே

விளக்கவுரை :

[ads-post]

5738. ஒன்றான சாத்திரத்தின் உளவாராய்ந்து வுத்தமனே பலநூலுங் கண்டுதேர்ந்து
சென்றுமே ரிஷிமுனிவர் கூறுநூலும் சிறப்பான சாத்திரத்தின் தொகுப்பைக்கண்டு
வென்றிடவே காலாங்கி தாள்பணிந்து வேகமுடன் குளிகையது பூண்டுகொண்டு
குன்றான மலைகுகைகள் யானுங்கண்டு கொற்றவனே காவியந்தான் கூறினேனே

விளக்கவுரை :


5739. கூறினேன் காவியந்தான் ஏழாயிரமாகும் கூறான சத்தகாண்டம்போலநூல்கள்
மீறியதோர் நூலுண்டோ வையகத்தில் மிக்கான நூலிதுபோல் ஆர்தான்சொன்னார்
மாறுபாடாகவல்லோ சாத்திரநூல்கள் மகத்தான சித்துமுனி சொன்னாரப்பா
ஆறுதலம் போலாக யிந்தநூல்தான் வப்பனே யுந்தனுக்கு வரைந்திட்டேனே

விளக்கவுரை :


5740. அறைந்ததொரு யின்னமொரு மார்க்கங்கேளு வப்பனே புலிப்பாணி மைந்தாபாரு
நிறைந்ததொரு சித்தர்முனி ரிஷிகளானோர் நீடாழி யுலகுதனி இருந்தவாறும்
குறைந்ததொரு வவரவர்கள் வயதுமார்க்கம் கூறுகிறேன் வையகத்தில் கண்டாராய்ந்து
மறைந்ததொரு சமாதியின்தன் மார்க்கமெல்லாம் மன்னவனே யுந்தனுக்கு நிகழ்த்துவேனே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar