போகர் சப்தகாண்டம் 5731 - 5735 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5731 - 5735 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5731. வந்ததொரு சித்துக்கு முறைமைசொல்வேன் வளமுடனே சோடசமாமொன்றுமூன்று
சிந்தனையாய் யவர்நூலில் கண்டாராய்ந்து சீருடனே யானுரைத்தேன் முறைதப்பாது
சுந்தரனே காலகண்டர் முனிவர்தாமும் சுத்தமுடன் யவர்மரபு யேதென்றாக்கால்
தந்திரமாங் கள்ளருட ஜாதியாகும் தாரணியில் அவர்நூலிற் கண்டவாறே

விளக்கவுரை :


5732. வாறான தலைமுறைகள் ஒன்றுபத்து வளமையுடன் அவர்நூலில் சொல்லலாகும்
நூறாண்டு வெகுகால மிருந்தசித்து நுட்பமுடன் சீஷவர்க்கங் கொண்டசித்து
காறான யின்னமொரு மார்க்கங்கேளு கருவான புலிப்பாணி மைந்தாபாரு
ஆறான சுப்பிரமணியர் மரபேதென்றால் வப்பனே சைவமென்ற பீடமாமே

விளக்கவுரை :

[ads-post]

5733. பீடமாந் தலைமுறைகள் ஏதென்றாக்கால் பேரான நூற்றிரண்டு பத்துமூன்று
கீடாதி நூல்களிலே கண்டவாறு கிருபையுடன் நானறிந்தமட்டுஞ் சொன்னேன்
நீடான யூகிமுனி மரபேதென்றால் நிசமான குரும்பருட ஜாதியாகும்
தாடான தலைமுறைகள் என்னசொல்வேன் தாக்கான பதினெட்டு ஒன்று மூன்றே

விளக்கவுரை :


5734. ஒன்றான சாதியப்பா இன்னஞ்சொல்வேன் வுத்தமனே புலிப்பாணி வுகந்துகேளு
நன்றான ஜெமதக்னி ஜாதிபேதம் நலமான சைவமென்ற ஜாதியாகும்
குன்றான மலையேறி கிரணந்தன்னை கிருபையுடன் கண்டல்லோ சாதமுண்போர்
வென்றிடவே தலைமுறைகள் நான்குபத்து வேகமுடன் வந்நூலில் கண்டோம்பாரே

விளக்கவுரை :


5735. பாரேதான் இன்னமொரு மார்க்கங்கேளு பாங்கான திரணாக்கிய முனிவர்தானும்
தேரேதான் சைனகருட ஜாதியாகும் தேரான பிரபுலிங்க லீலைநூலார்
நேரேதான் அவர்நூலில் ஜாதிபேதம் நேர்மையுடன் கண்டறிந்த ஜாதிமார்க்கம்
வேரேதான் தலைமுறைகள் ஈரெட்டொன்று வித்தகனே நூல்தனிலே கண்டோம்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar