5726. காணவே மகாசித்து அறிவானந்தர்
கைலாசநாதரென்றே செப்பலாகும்
தோணவே வள்ளுவனார் ஜாதியாகும்
தோறாமல் அவர்செய்த நூலிற்காண்பீர்
வேணவே தலைமுறைகள் எண்பதாகும்
வெகுநாளாய் மலைதனிலே இருந்தசித்து
ஆணவங்கள் தானொடுங்கி
யிருந்தசித்து வப்பனே அறிவான சித்துதாமே
விளக்கவுரை :
5727. சித்தான சித்துமுனி
சொல்வேன்கேளிர் சிறப்பான அகப்பேயர் சித்தேயாகும்
முத்தான ஜாதியது
யாதென்றாக்கால் முனையான நாயனார் ஜாதியாகும்
சத்தமுள்ள தலைமுறைகள்
ஈரெட்டாகும் சார்பாக வவர்நூலிற் காணலாகும்
நித்தமுமே வாணிபங்கள்
விர்த்திசெய்து நிலையாக பூமிதனில் இருந்தசித்தே
விளக்கவுரை :
[ads-post]
5728. சித்தென்றால் சித்துயிது
என்னசொல்வேன் சீர்பாலா புலிப்பாணி மைந்தாகேளு
புத்தியுள்ள பூபாலா
புனிதவானே பூவுலகில் இருந்ததொரு குதம்பைசித்து
பத்தியுடன்
பெண்ரூபங்கொண்டசித்து பாருலகில் வெகுநாளாய் இருந்தார்தாமும்
சுத்தியுடன் தேவதாபூசையோடும்
சுந்தரனே வெகுகால மிருந்தார்தானே
விளக்கவுரை :
5729. தானான வவர்மரபு
யாதென்றாக்கால் தாக்கான கோனாரின் ஜாதியாகும்
கோனான யிடையரென்றே
சொல்லலாகும் கொற்றவனே யவர்நூலில் சொன்னநீதி
மானான தலைமுறைகள்
ஏதென்றாக்கால் பத்துரெண்டொன்றுமூன்று
தேனான மனோன்மணியாள்
கடாட்சத்தாலே தெளிவாகக் கண்டறிந்தேன் பலநூல்தானே
விளக்கவுரை :
5730. நூலான பலநூலுங்
கண்டாராய்ந்து நுட்பமுடன் தானுரைத்த வண்மைநீதி
பாலான பாம்பாட்டி
மரபேதென்றால் பாலகனே ஜோதியென்ற ஜாதியாகும்
கோலான மாதவத்தார்
குலத்தினாலே கொற்றவனே சமாதியது பிரவேசமாகி
சேலான வையகத்தில் சிலதுகாலம்
சிறப்புடனே சமாதிவிட்டு வந்தசித்தே
விளக்கவுரை :

