5721. பாரினிலே யின்னமொரு
மார்க்கங்கேளு பாலான புலிப்பாணி மைந்தாகேளு
சீரிலகுஞ் சுந்தரனானந்தர்
தாமே சீரான மரபதுவும் ஏதென்றாக்கால்
ஆரியனார் தாமுரைத்த
நூலில்தாமும் வப்பனே அகமுடையர் என்னலாகும்
சூரியன் போல் தலைமுறைகள்
இருபத்தெட்டு சொல்லுதற்கு நாவில்லைப் பாவில்லைதானே
விளக்கவுரை :
5722. பாவில்லை புலிப்பாணி
யின்னங்கேளு பாங்குடனே வாரிதியாம் சாதிபேதம்
ஆவியுடன் பூமிதனி
லிருந்தசித்து வப்பனே வரத்தினால் பிறந்தசித்து
காவிலயங் கண்டதொரு
கள்ளர்ஜாதி கருவான ஜாதியென்றே செப்பலாகும்
நாவிலே சொல்வதற்கு
யாராலாகும் நலமான தலைமுறைகள் நாற்பத்தெட்டே
விளக்கவுரை :
[ads-post]
5723. எட்டான வால்மீகர்
மரபேதென்றால் யெழிலான வேடருட ஜாதியாகும்
திட்டான தலைமுறைகள்
சொல்வேன்பாரீர் தீர்க்கமுடன் முப்பத்திரெண்டேயாகும்
சட்டமுடன் வால்மீகர்
காவியத்தில் சாங்கமுடன் எழுதிவைத்தபடிநிதானம்
வட்டமுடன் வால்மீகர்
நூலறிந்து வளமுடனே கண்டறிந்து சொன்னதாமே
விளக்கவுரை :
5724. சொன்னேனே யின்னமொரு
மார்க்கம்பாரு தூய்தான புலிப்பாணி மைந்தாகேளு
நன்னயமாய் வூர்வசியார்
சாத்திரத்தில் நலமாகத் தானுரைத்த ஜாதிபேதம்
உன்னிதமாய் தேவதா
மடந்தையென்று வுத்தமர்கள் சித்தர்முனி கூறும்வண்ணம்
பன்னியே தலைமுறைகள் பகுக்கொண்ணாது
பாலகனே அடுமையென்ற ஜாதியாமே
விளக்கவுரை :
5725. ஜாதியா மின்னமொரு மார்க்கங்கேளு சாங்கமுடன் யானுரைப்பேன் மைந்தாபாரு
ஆதியாங் கமலமுனி யென்ற
சித்து வன்பான குரவரிட ஜாதியாகும்
நீதியாந் தலைமுறைகள்
ஆறெட்டாகும் நிஷ்களங்கமாகவல்லோ சாத்திரத்தில்
பாதிமதி சடையணிந்த
தம்பிரானும் பாடிவஐத்த நூல்தனிலே காணலாமே
விளக்கவுரை :

