போகர் சப்தகாண்டம் 5716 - 5720 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5716 - 5720 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5716. ஜாதியா மின்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி மைந்தாபாரு
ஆதியாம் தட்சணாமூர்த்தியப்பா வப்பனே யவர்மரபு யாதென்றாக்கால்
நீதியாங் கவுண்டனென்ற மரபேயாகும் நிஷ்களங்கமான தொருமூர்த்தியென்பார்
சோதிடமாம் பலநூல்கள் ஆராய்ந்தேதான் சொன்னதொரு மொழியதுவும் மெய்யதாமே

விளக்கவுரை :


5717. மெய்யான தலைமுறைகள் பதிமூன்றாகும் மிக்கான சாத்திரத்தில் உரைத்தவாறு
துய்யவே கோரக்கர் மரபேதென்றால் துப்புரவாய் மாராட்டியனார் என்னலாகும்
பையவே தலைமுறைகள் பதினொன்றாகும் பாங்கான சாத்திரத்திற் சொன்னவாறு
வெய்யவே வேதமுனி சித்துதாமும் வெகுநூல்கள் ஆராய்ந்து பார்த்தார்தானே

விளக்கவுரை :

[ads-post]

5718. தானான இன்னமொரு மார்க்கங்கேளு தயவான புலிப்பாணி கண்ணேயப்பா
கோனான கௌபாலராணிக்கோர்வை கொற்றவனே பாடிவைத்தா ருண்மையாக
மானான வவர்மரபு யாதென்றாக்கால் பாங்கான பப்பரவர் மரபேயாகும்   
மானான தலைமுறைகளெட்டேயாகும் மகத்தான பெருநூலில் சொன்னார்பாரே

விளக்கவுரை :


5719. சொன்னாரே ஜோதிமா முனிவரப்பா துப்புரவாய் ஆணியென்ற கோர்வைசெய்தார்
தென்னான தட்சணாபதியிலப்பா தேற்றமுடன் மலைதனிலே யிருக்குஞ்சித்து
பன்னவே மரபதுவும் ஏதென்றாக்கால் பாங்கான பள்ளனென்றே செப்பலாகும்
உன்னிதமாய் தலைமுறைகள் ஆறேயாகும் வுற்பனமாய் ஓதிவைத்தார் நூலில்தாமே

விளக்கவுரை :


5720. நூலான நூல்தனிலே சொன்னமார்க்கம் நுணுக்கமுடன் வெகுகோடி சொன்னாரப்பா
பாலாநடமரகர் மரபேதென்றால் பாங்கான மரவரென்றே செப்பலாகும்
தாலான தலைமுறைகள் நாலேயாகும் தாக்கான வவர்நூலில் சொன்னவாறு
பாலான மொழிபோலே முனிவர்தாமும் பாடிவைத்தார் பட்சமுடன் பாரில்தானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar