போகர் சப்தகாண்டம் 5711 - 5715 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5711 - 5715 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5711. பாரேதான் இன்னமொரு மார்க்கஞ் சொல்வேன் பாலகனே புலிப்பாணி மைந்தாகேளு
நேரேதான் வியாசருட மரபேதென்றால் நேர்பாக சந்திரகுல ஜாதியாகும்
சீரேதான் தலைமுறைகள் எண்பதாகும் சிறப்பான புராணவகை கூறும்வாறு
ஆரோதான் சாத்திரங்கள் அறியாமற்றான் வப்பனே கட்டிவைத்தார் கோடியாமே

விளக்கவுரை :


5712. கோடியாந் தேரையர் மரபேதென்றால் கொற்றவனே யானுரைப்பேன் கண்டமட்டும்
நீடியே பிரம்மகுல மென்னலாகும் நெடிதான காப்பியங்கள் கூறும்வண்ணம்
ஆடியதோர் தலைமுறைகள் ஏதென்றாக்கால் வப்பனே நவதசமு மென்னலாகும்
பாடியதோர் ரிஷிதேவர் முனிதேவர்தாமும் பண்பாகத் தாமுரைத்தார் பான்மைதானே

விளக்கவுரை :

[ads-post]

5713. பாண்மையாம் யாக்கோபு மரபேதென்றால் பாங்கான குலம்விட்டு குலம்புகுந்தோர்
மேன்மையாம் முன்சொன்ன ராமதேவர் மெய்யான குலமென்றே சொல்லலாகும்
தேன்மாரி பொழிகின்ற மச்சுதேசம் சென்றல்லோ பெயர்மாறி வுருவுகொண்டார்
வான்மீது வறுந்துதிபோல் உதிக்குந்தீரன் மகத்தான ராமதேவர் என்னலாமே

விளக்கவுரை :


5714. என்னவே ராமதேவர் என்னலாகும் எழிலான தலைமுறைகள் பதினாறாகும்
மின்னவே நாமமது ரெண்டேயாகும் மிக்கான சாத்திரங்கள் சொன்னவாறு
உன்னிதமாய்ப் பலமுனிவர் சித்துதாமும் வுத்தமனே தாமுரைத்தார் மறைப்போமெத்த
நன்னயமாய்ப் பலநூலுங் கண்டாராய்ந்து நலமுடனே ஜாதிபேதம் வுரைத்தேன்பாரே

விளக்கவுரை :


5715. பாரப்பா கொங்கணரின் மரபேதென்றால் பாங்கான யாதவகுலமேயாகும்
ஆரப்பா தலைமுறைகள் என்னசொல்வேன் வப்பனே ஈரெட்டுப் பதினாராகும்
நேரப்பா வவர்சொன்ன காண்டந்தன்னில் நேர்மையுடன் மரபதுவுஞ் சொல்லவில்லை
ஊரப்பா பலபேருங் கூடியல்லோ வுத்தமனே தாமுரைத்தார் ஜாதிதானே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar