போகர் சப்தகாண்டம் 5706 - 5710 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5706 - 5710 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5706. தானான கருவூரார் ஜாதிபேதம் தாக்கான பஞ்சணத்தில் குலத்திலொன்று
கோனான கன்னார ஜாதியாகும் கொற்றவனே நூல்தனிலே கண்டவாறு
தேனான தலைமுறைகள் நாற்பத்திரண்டு தெள்வுடனே நூல்தனிலே சொன்னார்பாரு
மானான மார்க்கமது சமயபேத மார்க்கமுடன் அவரவர்நூல் அறியலாமே

விளக்கவுரை :


5707. அறியவே புண்ணாக்கரீசர்தாமும் அவருடைய ஜாதிபேதங்கள் சொல்வேன்
நெறியான கன்னடிய ஜாதியாகும் நேர்பான தலைமுறைகள் ஏதென்றாக்கால்
குறியான பதினெட்டு தலைமுறைதானாகும் குறிப்பான சாத்திரத்தில் சொன்னவாறு
முறியான சித்தர்மகா ரிஷிகள்நூலில் முறைபாடு சிலபேர்கள் சொல்லாரன்றே  

விளக்கவுரை :

[ads-post]

5708. சொல்வாரே புலிப்பாணி மைந்தாகேளு சுத்தமுள்ள கண்மணியே புகல்வேன்பாரு
வல்லான புலிப்பாணி மரபேதந்தான் மார்க்கமுடன் வேடனதுஜாதியல்லோ
புல்லான தலைமுறைகள் ஒன்பதாகும் புகழான நூல்தனிலே புகலும்வாறு
நல்லான ரிஷிதேவர் முனிவர்தானும் நலமுடனே சிலருரைத்து சிலர்மறைத்தாரே

விளக்கவுரை :


5709. மறைவான நந்தீசர் மறபேதென்றால் மார்க்கமுடன் மிருகமகா ரிஷியார் தோத்திரம்
குறையான தலைமுறைகள் ஏதென்றாக்கால் கொற்றவனே மூன்றுதலை முறைதானாகும்
நிறைவான சாத்திரத்தில் சொன்னவாறு நிஷ்களங்கமாகவல்லோ கண்டறிந்தோம்
முறையான முனிதேவர் ரிஷிகள்நூலில் முற்றிலுஞ் சொல்வார்கள் மறைத்தார்காணே

விளக்கவுரை :


5710. காணவே யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கருவான புலஸ்தியரின் மரபேதென்றால்
தோணவே சிங்களவ ஜாதியாகும் தோறாமல் தலைமுறைகள் எட்டதாகும்
பூணவே புலஸ்தியர் இந்நூல்கள்தன்னில் புகலாமல் மறைத்துவைத்தார் முன்னோர்தாமும்
வேணபடி யான்கண்டவரைதானப்பா வித்தகனே வெளியிட்டேன் பண்பாய்ப்பாரே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar