போகர் சப்தகாண்டம் 5701 - 5705 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5701 - 5705 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5701. மட்டான இடைக்காடர் ஜாதிபேதம் மகத்தான கோனாரேயென்னலாகும்
சிட்டமுள்ள கோத்திரங்கள் பதினெட்டாகும் திகழான நூலதனிற் கண்டமட்டும்
சட்டமுடன் தன்வந்திரி ஜாதிபேதம் தகமையுள்ள மகாவிஷ்ணுயென்னலாகும்
வட்டமுள்ள தலைமுறைகள் முப்பத்திரண்டு வளமுடனே கண்டறிந்த நூலிதாமே

விளக்கவுரை :


5702. தாமான புலிப்பாணி மைந்தாகேளு தகமையுள்ள மூலத்தீயீசனப்பா
சாமானியமானதொரு ஜாதிபேதம் சாங்கமுடன் வேளாளன் என்னலாகும்
கோமானாந் தலைமுறைகள் இருபத்தேழாம் கொற்றவனே நூற்படியே சொல்லலாச்சு
பூமான்கள் சித்தவர்க்க நூல்கள்தன்னில் புகட்டவில்லை ஜாதிபேதம் புகலார்தாமே

விளக்கவுரை :

[ads-post]

5703. தானான சிலநூலில் சொன்னாரப்பா தன்மையுள்ள சிலநூலில் சொல்லவில்லை
கோனான அகத்தீசர் ஜாதிபேதம் கொற்றவனே வேளாளாளென்னலாகும்
பானான தலைமுறைகள் ஏதென்றாக்கால் பதமுடனே நாற்பத்தியெட்டேயாகும்
மானான நூல்தனிலே கண்டாற்போல மகத்தான போகரிஷி வகுத்திட்டேனே

விளக்கவுரை :


5704. வகுத்தேனே சிவவாக்கியர் ஜாதிபேதம் வளமான சங்கரகுலமென்னலாகும்
தொகுப்புடனே தலைமுறைகள் யிருபதாகும் தோறாமல் சாத்திரங்கள் புகன்றவாரும்
மிகுத்திடவே ராமதேவர் ஜாதிபேதம் மிக்கான மிக்கான விஷ்ணுகுல மென்னலாகும்
பகுத்திடவே தலைமுறைகள் ஆறதாகும் பாங்கான வவர்நூலில் கண்டோம்யாமே

விளக்கவுரை :


5705. கண்டோமே புஜண்டரிட ஜாதிபேதம் கருவான வக்கினிகுல மென்னலாகும்
விண்டதொரு தலைமுறைகள் நாற்பத்தைந்து வீரான சாத்திரத்தில் கண்டதுண்டு
பண்டிதமாம் வன்னியரின் புராணக்கூறு பலபலவாய்ப்பாடிவைத்தார் கவிவாணர்தாமும்
கண்டகம் போல்சாத்தரங்கள் மிகவுங்கூறி தாமறைத்தார் சித்துமுனி ரிஷிகள்தாமே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar