போகர் சப்தகாண்டம் 5696 - 5700 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5696 - 5700 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5696. கானான புலிப்பாணி மைந்தாகேளு தகைமையுள்ள காலாங்கிசொன்னநீதி
கோனான பதினென்பேர் சித்தர்தாமும் கொற்றவனே நவகோடி சித்தர்தாமும்
பானான நாற்பத்தெண்பேர்களப்பா பலபலவாஞ் சாத்திரங்கள் பாடிவைத்தார்
மானான தலைமுறைகள் சாதிவர்க்கம் மன்னவனே சாத்திரத்திற் சொல்லாரன்றே

விளக்கவுரை :


5697. சொல்லவில்லை சிலபேர்கள் சொன்னாரப்பா சுந்தரனே சிலபேர்கள் மறைத்துவைத்தார்
வெல்லவே காலாங்கிநாதர்தாமும் வேகமுடன் குளிகையது கொண்டுமல்லோ 
கல்லான மலைகளிலும் குகைகள்தன்னில் கண்டுமே ஆராய்ந்து சித்துதம்மை
புல்லவே சாதிபேதங்கள் ரெண்டு புகழான சாத்திரத்தில் வசனித்தாரே

விளக்கவுரை :

[ads-post]

5698. வசனித்தார் எந்தமக்கு காலாங்கிநாதர் வளமுடனே சொன்னதொரு சாதிமார்க்கம்
நிசமுடனே யானுரைப்பேன் நீதிவானே நிஷ்களங்கமானதொரு பேதஞ்சொல்வேன்
தசமான காலாங்கி நாதர்தாமும் தாக்கான மயன்சாதி யென்னலாகும்
கசடன்று தலைமுறைகள் பத்தேயாகும் காசினியில் கண்டவரை யுரைத்திட்டோமே

விளக்கவுரை :


5699. உரைத்தோமே எந்தனிட சாதிமார்க்கம் வுத்தமனே விஸ்வகர்மமென்னலாகும்
நிரைத்ததொரு ரோமரிஷி சாதிபேதம் நிலையான வலைவீசுஞ்சாதியப்பா
திரைத்ததொரு எந்தனது தலைமுறைதானப்பா திரளான பதினெட்டு தலைமுறையாகும்
வரைத்ததொரு ரோமரிஷி தலைமுறைதானப்பா வாகான பனிரெண்டு தலைமுறைதானாமே

விளக்கவுரை :


5700. தலைமுறையாம் மச்சமுனி சாதிபேதம் தண்மையுள்ள கல்லுடையோர் என்னலாகும்
கலையான கோத்திரங்கள் அறுபத்திரண்டு காசினியில் கண்டவரைச் சொல்லலாச்சு
மலையான சட்டமுனி சாதிபேதம் மகத்தான சிங்களவன் என்னலாகும்
சிலையான கோத்திரங்கள் பதினாலாகும் சிற்பரனே கண்டநூல் அறிந்தமட்டே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar