போகர் சப்தகாண்டம் 5691 - 5695 of 7000 பாடல்கள்



போகர் சப்தகாண்டம் 5691 - 5695 of 7000 பாடல்கள்

bogar-saptha-kaandam

5691. ஓடென்ற வுச்சாடங் கூறும்போது வுத்தமனே யதர்வணமும் நீங்கியல்லோ
நீடென்று வஸ்துசுத்தி பானஞ்செய்து நிலையுடனே பாலமிர்தம் வாயிலிட்டு
கூடென்று வசிமூலி வாயிற்கொண்டு கொற்றவனே செவிதனிலே யூதும்போது
மேடென்று வையகத்தில் கண்திறந்து மேதினியில் உயிரதுவும் வருகும்பாரே

விளக்கவுரை :


5692. பாரேதான் சித்துமுனி ரிஷிகள்தாமும் பாருலகில் அதர்வணத்தை மறைத்துவைத்தார்
ஆரோதான் சொன்னவர்கள் ஆருமில்லை வப்பனே யாமுமக்கு சொன்னோம்பாரு
நேரேதான் காலாங்கிநாதர்தாமும் நேர்மையுடன் எந்தனுக்கு உரைத்தநீதி  
பேரேதான் சொல்வதற்கு யாருமில்லை பேரான போகரிஷி யுரைத்தேன்பாரே
விளக்கவுரை :

[ads-post]

5693. உரைத்தேனே ஏழாயிர சத்தகாண்டம் வுற்பனமும் விற்பனமும் மெத்தவுண்டு
நிரைத்தேனே யாறாவது காண்டத்துள்ளே நேர்மையுடன் அதர்வணத்தைக் கூறினேன்யான்
விரைத்ததொரு பொருளெல்லாம் இதிலடக்கம் விருப்பமுடன் பாடிவைத்த சத்தகாண்டம்
குரைத்த தொருபொருளெல்லாம் எந்தனாயர் குருமுனியாம் அகஸ்தியத்தில் காணலாமே

விளக்கவுரை :


5694. காணலாம் அகத்தியனார் காவியத்தில் கருவான பன்னீராயிரத்திலப்பா   
பூணலாம் பனிரெண்டு காண்டத்துள்ளே புகட்டினார் கோடிவகைக் களஞ்சியங்கள்
தோணவே யண்டசராசரங்களெல்லாம் துறட்டியென்ற குடலதுபோல் கூறினார்கள்
வேணபடி குருநூலாம் பன்னீராயிரம் விருப்பமுடன் பாடிவைத்தார் முனிவர்தாமே

விளக்கவுரை :


5695. முனியான என்பாட்டன் அகஸ்தியர்தாமும் முனையான காலாங்கி நாதர்தாமும்
சொனைபோலே சாத்திரங்கள் எனக்குரைத்தார் தோற்றமுடன் பிரகாசமானசித்து
மனைதோறும் சாத்திரவேதாகமங்கள் மார்க்கமுடன் பாடிவைத்தார் பலநூல்சித்தர்
வினையாலே மாண்டதொரு மாண்பருக்கு விரிவான அதர்வணங்கள் சொல்லார்காணே

விளக்கவுரை :


போகர் சப்தகாண்டம், போகர் , Bogar, Bogar 7000, Bogar Siththar