அகத்தியர் பன்னிருகாண்டம் 66 - 70 of 12000 பாடல்கள்
66. கதையென்றால் சத்தியிடனாதமுப்பு
கவிவாணர் கட்டுவித்த வழலைமுப்பு
விதையுடனே பூர்வமுப்பு சொல்வேன்பாரு
எழிலான புலத்தியனே செப்பக்கேளும்
பதையாமல் தலைப்பிண்டந் தன்னின்மேலே
பாங்கான தேவதா முப்புசொல்வேன்
சதையான மேல்வளர்ந்த முப்பூவல்ல
தகைமையுள்ள முப்பூவின் பெருமைபாரே.
விளக்கவுரை :
67. பாரேதான வனாலுங் கூறப்போமோ
பாருலகி லெவராலுஞ் சொல்லொண்ணாது
நேரேதான் திரிமூர்த்தி யிருந்தமுப்பு
நெடி தாகநடராசர் கூத்தாடுமுப்பு
சீரேதான் நாதத்தால் வந்தமுப்பூ
செழுமையுடன் முப்பூவை யென்னசொல்வேன்
கூரேதான் வாதியிலே வந்தமுப்பூ
கூறுவேன் கண்மணியே புகலக்கேளே.
விளக்கவுரை :
68. கேளேதான் வகாரத்தில் வளர்ந்தவுப்பு
கெடியான மகாரத்தில் சரிந்தவுப்பு
பாளேதான் போகாத பிரமனுப்பு
பாங்கான ருத்திரனார் கண்டவுப்பு
வீளேதான் ருத்திரனார் கண்டவுப்பு
வியர்வான மூவர்களால் சமைந்தவுப்பு
நாளேதான் வளர்ந்துவரும் மண்கூறுப்பு
மகத்தான பரமனிட வுப்புமாச்சே.
விளக்கவுரை :
69.ஆச்சப்பா தசவாய்வால் வளர்ந்தவுப்பு
அப்பனே மனோன்மணியாள் நின்றவுப்பு
வாச்சப்பா மணித்தாயாள் சமைந்தவுப்பு
வாகான கமலமதில் வளருமுப்பூ
நீச்சப்பா கோடிவரை காரமான
நெடிதான முப்பூவு மதீதமெத்த
மாச்சலுட னிந்தவுப்பு யார்தான் காண்பார்
மகத்தான சிவயோகி காண்பான்பாரே.
விளக்கவுரை :
70. காண்பானே முப்பூவைக் கண்டபோது
கசடகற்ற யெண்ணெய்தனை வாங்கமைந்தா
மாண்பான முப்பூவைக் கிளிபோல்கட்டி
மயங்காமல் பாண்டமதில் தொங்கவிட்டு
சாண்பான சத்தசலம் பாண்டமிட்டு
பாலகனே வதிற்போட மருந்துகேளு
நாண்பான யுவருப்பு வளையலுப்பு
மார்க்கமுடன் றான்சேர்த்து அடுப்பிலேற்றே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 66 - 70 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar