அகத்தியர் பன்னிருகாண்டம் 266 - 270 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 266 - 270 of 12000 பாடல்கள்


266. இருந்தேனே வடிவேல ருபதேசங்கள்
    யெழிலுடனே பெற்றுமல்லோ பொதிகைசென்றேன்
திருத்தமுடன் பொதிகைதனில் கோடிசித்தர்
    திறமுடனே யெந்தனையும் எதிர்தான்கொண்டு
வருந்தியே வணக்கமது மிகவுஞ்செய்து
    வளமுடனே யாசீர்மங் கொண்டுசென்றார்
பொருந்தவே குகைக்குள்ளே வடியேன்றானும்
    பொங்கமுடன் சமாதிதனி லிருந்தேன்பாரே.

விளக்கவுரை :


267. பாரப்பா சமாதிதனி லிருந்தேன்யானும்
    பாங்குடனே பதினெண்பேர் சித்தர்தாமும்
நேருடனே யவரவர்கள் செய்தநூலை
    நேர்மையுட னெந்தனது குகையின்முன்னே
சீருடனே மூன்றுபத்து லட்சநூலை
    சிறப்புடனே பாடிவைத்தார் பதினெண்பேர்கள்
ஆருடைய நூல்பார்த்து வறிந்திட்டாலும்
    அப்பனே வெளிப்படைதா னொன்றுங்காணே.

விளக்கவுரை :


268. காணவே யித்தாதி நூல்களெல்லாம்
    கைலாச பொதிகையின் குகைமுன்னாக
வேணபடி சித்தரெல்லாங் கூட்டமிட்டு
    விருப்பமுடன் நூலதனையே கொண்டுசென்றார்
பூணவே நூலெல்லாம் பார்த்துமேதான்
    புகழாகத் தோஷமது சொல்லியல்லோ
மாணவே சித்தமுனி ரிடிகள்தாமும்
    மானிலத்தில் மதிப்பதற்கு நூல்செய்தேனே.

விளக்கவுரை :


269. செய்தேனே பதினெண்பேர் நூல்கள்தன்னை
    செப்பவே பெருநூலாங் காண்டமாக
உய்யதொரு காண்டமது பனிரெண்டுமாகும்
    உத்தமனே வாயிரத்துக் கொருகாண்டந்தான்
நையவே காவியம் பன்னீராயிரந்தான்
    நலமுடனே பாடிவைத்தேன் மாந்தர்க்காக
பையவே பாடியதோர் காவியத்தை
         பார்த்துமே பதினெண்பேர் கோபித்தாரே.

விளக்கவுரை :


270. கோபித்து யென்பேரில் சீறல்கொண்டு
    கொப்பெனவே சாத்திரத்தில் தர்க்கஞ்சொல்லி
சாபித்து குகைக்குள்ளே வைத்துமேதான்
    சட்டமுடன் குகைதனிலே வைத்துப்பின்பு
தூபிதங்க ளர்ச்சனைகள் மிகவுஞ்செய்து
      துறையோடும் முறையோடு மஞ்சலித்து
நேவித்து அஷ்டாங்க வர்ச்சனைகள்செய்து
    நிலையான சமாதியிடம் நூல்வைத்தாரே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar