அகத்தியர் பன்னிருகாண்டம் 11 - 15 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 11 - 15 of 12000  பாடல்கள்


agathiyar-panniru-kandam

11. காண்டமாம் பன்னீராயிந் தானிந்நூல்
    காணாத காட்சியெல்லா மிதற்குள்ளாகும்
வேண்டியதோர் கருமான மிதற்குள்ளுண்டு
    விருப்பமுடன் சூட்சாதி மிதற்குள்ளுண்டு
தாண்டவம்போல் லட்சுமியாள் மனோன்மணித்தாய்
    சதாகாலம் வீற்றிருப்பார் பெருநூல்தன்னில்
நீண்டதொரு சாகரமும் இதுவேயாகும்
    நிலையான காவியம் பன்னிரண்டுமாமே.

விளக்கவுரை :

12. ஆமேதான் காவியத்துக்  கோயிரந்தான்
           அப்பனே பாடிவைத்தேன் பெருநூலப்பா
தாமேதான் காண்டத்துக் காயிரந்தான்
            சாற்றினேன் காவிய மாயிரந்தானாகும்
நாமேதான் சொன்னபடி பன்னிரெண்டுகாண்டம்
           நலமுடனே பன்னிராயிரக் காவியந்தான்
போமேதான் பெருநூலைப் பார்த்தபேர்க்குப்
           பொங்கமுடன் பதவிகளுங் கிட்டுந்தானே.

விளக்கவுரை :

13. தானான சாலோக சாயுச்சியந்தானும்
    தகைமையுடன் பதவிகளுக் கிடமுண்டாகும்
வேனான பதவியதுக் கிட்டும்போது
    வேகமுடன் மோட்சமென்ற வீடுதானும்
பானான சொர்க்கபதிக் காணியாகும்
    பரலோக மென்னாளும் பலிக்கும்பாரு
மானான சாத்திரத்தை மதிப்பிட்டேதான்
    மானிலத்தில் பார்த்தவா்க்கு மகிமைகேளே.

விளக்கவுரை :

14. கேளேதான் மடலவிழும் தாமரையாள்தானும்
    கிருபையுடன் என்னாளும் வாசமுண்டாம்
நாளேதான் மகிமையுண்டாங் கீர்த்தியுண்டாம்
    நலமான வாழ்நாளும்  மிகவுண்டாகும்
பாளேதான் போகாமல் இடமுண்டாகும்
    பாரினிலே யெந்நாளும் வெற்றியுண்டாகும்
வீளேதான் சின்மயத்தின் வெண்ணீருண்டாம்
    வீரமுட னென்போக மிகவுண்டாமே.

விளக்கவுரை :

15. உண்டான சாத்திரத்தை மிகவும்பார்த்து
    உத்தமனே புலஸ்தியனே செப்பக்கேளும்
கண்டுமே யாராய்ந்து பலனூல்பார்த்து
    கவனமுடன் பாடிவைத்த பெருனூலப்பா
விண்டதிலை கண்டவா்கள் மகிமையப்பா
    விருப்பமுடன் தனையறிந்த பெருநூலப்பா
தெண்டனிட்டுப் பணிவுடனே காத்திருந்து
    தொந்தமுட னின்னூலை வாங்கநன்றே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar