அகத்தியர் பன்னிருகாண்டம் 416 - 420 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 416 - 420 of 12000 பாடல்கள்


416. இருப்பாரே கைலங்கிரி ரிடிதானப்பா
    எழிலான நடுமையம் படியந்தன்னில்
பொருப்பான நவரத்தின கசிதமான
    பொன்னான திருக்கூட மண்டபந்தான்
தருப்புகல வராட்சி மணிதானப்பா
    தாரணியில் நூறு யோசனைதான்கேட்கும்
துருப்புநிகர் சிங்களத்தா ராயிரம்பேர்
    தோறாமல் யேவல்பணி முன்னிற்பாரே.

விளக்கவுரை :


417. நிற்பாரே சிங்கள தேசத்தார்கள்
    நிலையான சித்தர்முனிக் கேவலாக
சொற்படியே கோட்டைதனைச் சுற்றியேதான்
    சோரமது போகாமல் காவலுண்டு
விற்படித்த மன்னவர்கள் காணானாடு
    வேதாந்த பீடமென்ற சித்தர்நாடு
அற்பமென்று நினையாதே புலஸ்தியாகேள்
    அழகான சிங்களவர் நாடுதானே. 

விளக்கவுரை :


418. நாடான ரிடிமுனிவ ரிருக்கும்நாடு
    நாதாந்தத் தங்கமென்ற மண்டபந்தான்
காடான யேகாந்த மண்டபத்தில்
    கைலங்கிரி ரிடியான பெரியோரப்பா
தாடாண்மைக் கொண்டதொரு சித்துதாமும்
    தாரணியில் நாலுயுகங் கொண்டசித்து
நீடான மயேஸ்வரத்தின் சித்துவப்பா
    நீணிலத்தி ரிடியாக வுதித்தார்பாரே.

விளக்கவுரை :


419. உதித்தாரே முன்யுகத்தில் பிரம்மர்சாபம்
    ஓகோகோ தேவரிடி யானவர்க்கு
கதிப்புடனே சாபமது நேர்ந்ததாலே
    கைலங்கிரி தன்னைவிட்டு வெளியில் வந்தார்
மதிப்புடனே வையகத்து சித்தரெல்லாம்
    மாட்சியோடு தேவதா ரிடியைத்தானும்
துதியோடு தேவதா மண்டபத்தில்
    துப்புறவாய்க் கொண்டசென்று துதித்தார்பாரே.

விளக்கவுரை :


420. பாரப்பா சித்தர்முனி ரிடியார் தாமும்
    பட்சமுடன் தேவதா ரிடியைப்பார்த்து
ஆரையா யென்சாமி யெந்தன்நாதா
    அவனியிலே யிருந்தவாசி யாயுதித்தீர்
பேரான பிரபஞ்ச மாய்கைதன்னை
    பேரின்பக் கடல்தனிலே தான்மறந்த
தீரமுடன் சித்தொளிவு ரிடியார்தம்மை
    தீர்க்கமுடன் கேட்கலுற்றார் முனிவர்தாமே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar