அகத்தியர் பன்னிருகாண்டம் 381 - 385 of 12000 பாடல்கள்
381. காணவென்றால் கைலாயங் காணவேண்டும்
காணாட்டால் கோபுரத்தைக் காணவேண்டும்
பூணவே சித்தொளிவு முனிதானப்பா
பொங்கமுடன் றானிருக்குங் கோபுரந்தான்
வேணபடி சித்தர்கள்தான் யிருக்கும்ஸ்தானம்
விருப்பமுடன் யானுரைத்தேன் மைந்தாகேளு
தோணவே தடாகமென்று அதிலேயுண்டு
தோற்றமுடன் மஞ்சள் தாமரையுண்டாமே.
விளக்கவுரை :
382. உண்டாமே மனோன்மணியா ளிருக்கும்பொய்கை
ஓகோகோ நாதாக்கள் வணங்கும்பொய்கை
அண்டர்முனி ராட்சதர்கள் நடுங்கும்பொய்கை
அழகான மண்டபந்தான் மத்திபத்தில்
குண்டலம்போல் வயிரக்கல் லிங்கமுண்டு
கூறான வஞ்சுதலை நாகமுண்டு
சண்டமா ருதம்போல தொனிகள்கேட்கும்
சட்டமுள்ள தேவாதி ஸ்தலமென்பாரே.
விளக்கவுரை :
383. என்பாரே வயோத்திக்கு வடக்கேயப்பா
எழிலான நதியொன்று மலையொன்றுண்டு
குன்றான மலைதனிலே சுனையொன்றுண்டு
குருக்களாஞ் சித்துவர்க்க சேனையுண்டு
வென்றிடுவார் ராட்சதாள் கூட்டமப்பா
வீரமுனி லாடமுனி கறுப்பன்சாமி
நன்றான பிடாரிமுதல் தேவதைகள்கூட்டம்
நலமான மலையோரம் நிற்பார்பாரே.
விளக்கவுரை :
384. பாரேதான் டில்லிக்கு மேற்கேயப்பா
பாங்கான வளர்நாடு சித்துநாடு
நேரேதான் பூமிக்குள் சுரங்கமப்பா
நெடுந்தூர மாயிரமாங் காதங்காணும்
சூரமுனி சித்துகளும் ரிடிகள்கூட்டம்
சொற்பெரிய வகிலமென்ற கோட்டைதன்னில்
ஊரேதான் பாதாள பூமியாகும்
உத்தமனே சித்தர்முனி வாசம்பாரே.
விளக்கவுரை :
385. வாசமாங் கோட்டைக்குப் பூதங்காவல்
வளம்பெரிய கோட்டைநக ரெல்லாஞ்சுத்தி
பாசமுடன் கிடாரங்கள் கோடாகோடி
பார்தீர்ந்து வைத்ததுபோல் நிற்கும்பாரு
நேசமுடன் யார்சென்று யெடுத்தாலுந்தான்
நேர்மையுடன் பூதங்க ளறைந்துகொல்லும்
மோசமது வருகுமல்லோ முனிவர்தாமும்
முசியாமல் காத்திருந்தார் கோடியாமே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 381 - 385 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar