அகத்தியர் பன்னிருகாண்டம் 76 - 80 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 76 - 80 of 12000 பாடல்கள்



76. ஊதவென்றால் சுண்ணாம்பைப் பதனம்பண்ணு
    உத்தமனே யிப்படியே மூன்றுமுறைதானும்
நீதமுடன் சுண்ணமதை ஊதும்போது
    நிலையான பேரண்டம் நிலைத்துநின்று
காதமுடன் அமுர்தமென்ற கல்லைத்தானும்
    கசடகற்றி சுண்ணம்பாய் நீற்றும்பாரு
கோதமுடன் சுண்ணம்பை நீற்றிக் கொண்டு
    துறையோடு முறாயோடுஞ் செப்பக்கேளே.  

விளக்கவுரை :


77. செப்பவென்றா லிப்பூவும் காரமெத்த
    செகத்தி லிதற்கீடு சொல்லப்போமோ
ஒப்பமுடன் சுண்ணமதால் வாதமாச்சு
    ஓகோகோ நாதாக்க ளதீதவித்தை
செப்பமுடன் செய்வதுவும் லேசேயென்றாகி
    தொல்லுலகில் முழுமக்கள் செய்வாறோசொல்
இப்பு....... ... ...குறையிருந்தால்
    யெழிலாகச் செய்வார்கள் திண்ணந்தானே.

விளக்கவுரை :


78. திண்ணமாம் புலஸ்தியனே செப்பக்கேளு
    .... ..... ....யார்தான் காண்பார்
வண்ணமப ..... ...மண்டலத்தில் யெ................
    ....யுடன் வண்டத்தை யெடுத்துக்கொண்டு
சுண்ணமு..................ட்டும் தான்
    கசடகற்றி யிருப்புலக்கை யாலேகு
..... ...ற் சாமமிடித்துத் தீருசட்டமுடன்
    ... ... ... ..... ..... .... ... ....................................

விளக்கவுரை :


79. .... ... ... ...... ....... ..... ...........................
    ........ ..... .... ... .... .....................................
... ... ........ ..... ...... .......................
    ...... ...... ...... ...அண்டமதுமை போலாகி
கானமுடன் காரமது மிகவுண்டாக
    கண்டுண்ட பனிநீரால் யெண்ணைகக்கு
பானமுடன் வெண்மைநிற மாகவல்லோ
    பார்வைக்கு மெழுகதுபோ லிருக்குந்தானே.

விளக்கவுரை :


80. தானான வெண்ணையது பில்லைதட்டித்
    தகைமையுடன் ரவிதனிலே காயவைத்து
வேனான மூசை தனிலே வைத்துவூத
    வென்மகனே சுண்ணமதை புகலப்போமோ
கோனான குருவருளால் சுண்ணமாகி
    கொற்றனே காரமது மிகவுண்டாகி
தேனான பற்பமது சொல்லப்போமோ
    தெளிவான பற்பமதை பாண்டம்போடே.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar