அகத்தியர் பன்னிருகாண்டம் 166 - 170 of 12000 பாடல்கள்

அகத்தியர் பன்னிருகாண்டம் 166 - 170 of 12000 பாடல்கள்


166. எய்யவே நரகத்துக் கேதுவாகி
    யெழிலான கோத்திரங்கள்...............வேம்
நய்யவே ரோகத்துக்காளு மாகி
    ........... .......................போதும்
செய்யவே மதியூகி பண்டிதங்கள்
    செகதலத்தில் ....... ....... .....புண்ணியவானாய்
மெய்வருந்த பாடுதனைப் பட்டானாகில்
    வே........ ........ .......லியது மேவுந்தானே.
  
விளக்கவுரை :


167. மேவுமே மோட்சமென்ற கூலிதானும்
    மேன்மையுடன் கிடைக்குமது தப்பேயில்லை
தாவுமது மோட்சமென்ற வீடுதானும்
    சதாகாலம் காணிக்கை யென்னலாகும்
சாவுமென்ற மரணமது வெகுநாட்செல்லும்
    சாவுமில்லை கோடிவரை யிருப்பான்பாரு
பாவுமென்ற புராணங்களிதிகாச மெல்லாம்
    பாடிவைத்தார் லோகத்து சித்தர்தானே.
    
விளக்கவுரை :


168. தானான சித்தர்முனி ரிடிகள்போலே
    தகைமையுட னெப்போதும் இருக்கலாகும்
மானான மானிலத்தி லிருந்துகொண்டு
    மதிப்புடனே வளைந்து சிவராஜயோகம்
வேனான விதிப்படியே முறைகள்பார்த்து
    விபரமுடன் செய்பவனே யோகவானாம்
கோனான குருசொன்ன வாக்குபோல
    குவலயத்தில் பண்டிதங்கள் செய்யநன்றே.

விளக்கவுரை :


169. செய்யவே முழுமக்கள் பண்டிதற்கு
    செயலான பாக்கியமும் பெருகலாகும்
மெய்யாக மோட்சமென்ற வீடுதானும்
    மேன்மையுட னெப்போதுங் காணியாகும்
பையவே பரிகாரஞ் செய்யாதாற்கு
    பாரினிலே யாதொரு பலனுமில்லை
துய்யவே துன்ப சாகரத்தைவிட்டு
    துறையோடு முறையோடு மிருப்பார்தானே.

விளக்கவுரை :


170. இருப்பாரே புலஸ்தியனே யின்னங்கேளும்
    யெழிலான பண்டிதத்திற் குருமுடிக்க
பொருப்பான தேசங்கள் நதிகள்தேடி
    பொலிவான காடுமலை வனாந்திரங்கள்
குருப்பான யிடமெல்லா மாராய்ந்தேதான்
    குவலயத்தில் பூனீறு யெடுக்கவல்லோ
விருப்பான பூமிதனைக் கண்டாராய்ந்து
    வேகமுடன் வழலைதனை முடிக்கக்கேளு.

விளக்கவுரை :

அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar