அகத்தியர் பன்னிருகாண்டம் 251 - 255 of 12000 பாடல்கள்
251. செப்பவென்றால் அண்டமென்ற கல்லைத்தானும்
தெளிவுடனே நாதாக்கள் சொற்படிக்கி
ஒப்பமுடன் அண்டமென்ற கல்லைத்தானும்
வுத்தமனே காரமென்ற செயநீர்தன்னால்
சிப்பியுட செயநீர்தான் கடுங்காரமாச்சு
யிப்புவியி லாரறிவார் அண்டப்போக்கு
தப்பாமல் அண்டக்கல் காரமேற்றி
தகைமையுடன் கெஜபுடத்தில் போட்டிடாயே.
விளக்கவுரை :
252. போடவே யண்டக்கல் சுண்ணாம்பாகி
பொங்கமுடன் சுண்ணமென்ற நெடிதான்வீகம்
நீடவே சரக்குக்குக் காலனாகும்
நெடிதான சத்துருவைக் கொல்லுமித்திரன்
சாடவே பாஷாண முப்பத்திரெண்டும்
சாங்கமுடன் பொருமியது
தேடவே வழலையென்ற வண்டமுப்பை
தெளிவுடனே சீசாவிற் பதனம்பண்ணே.
விளக்கவுரை :
253. பண்ணவே சுண்ணமதை கடுகளவுதானும்
கருவான வெண்ணைதனில் கொண்டாயானால்
நண்ணமுடன் காயாதி கற்பமாகும்
நாதாக்க ளுந்தனையும் நவிலுவார்கள
எண்ணமுடன் நாதாக்க ளும்மைத்தானும்
யெழிலாக முப்பூவைக் கேட்டபோது
வண்ணமுடன் முப்பூவைக் கொடுக்க்கவேண்டாம்
வளஞ்சொல்லி சித்தர்களுங் கேட்பார்தாமே.
விளக்கவுரை :
254. கேட்டவுடன் மனமகிழ்ந்து கொடுக்கவேண்டாம்
கெடியான வார்த்தைக்கு அஞ்சவேண்டாம்
நீட்டமுடன் முப்பூவைக் கண்டபோது
நீயுமொரு சித்தனாய் ஆகிவிட்டாய்
நாட்டமுடன் வழலைதனை அறிந்ததாலே
நலமான அஷ்டசித்து மாடலாகும்
தாட்டிகமாய் பற்பமதை தேனிலுண்ண
தாரணியில் வெகுகால மிருக்கலாமே.
விளக்கவுரை :
255. இருக்கலாம் கோடிவரை யுகாந்தகாலம்
யெழிலுடனே நாலுயுகங் காணலாகும்
பொருக்கவே தேகமது கற்றூணாகும்
பொங்கமுடன் சட்டையது தள்ளும்பாரு
வகுக்கவே தேகமது பொன்போல்வீசும்
வளமான வாசியது கீழ்நோக்காகும்
இருக்கவே கோடியுகம் சமாதிதன்னில்
யெழிலாக தேகமது அழியாதென்றே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 251 - 255 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar