அகத்தியர் பன்னிருகாண்டம் 136 - 140 of 12000 பாடல்கள்
136. கூறுவான் வாய்ஞான மிகவும்பேசி
குவலயத்தில் காவி காஷாயம்பூண்டு
தூறுவான் மூடரிட வித்தைபேசி
துடியான வார்த்தையது மிகவுங்கூறி
சீறியே பேச்சுகளா லடித்துருட்டி
சிறப்பான தத்துவ வழிபோலேதானும்
மீறியே வரங்கடந்து யதிகம்பேசி
மிக்காகி கலையில் நின்று வழிசொல்வானே.
விளக்கவுரை :
137. சொல்லவே அவரிட சீஷவர்க்கம்
துறையான வழிபாடு யிதுதானென்று
வெல்லவே காவி காஷாயம்பூண்டு
வேகமுடன் லக்கோடா ய்த்தானணிந்து
புல்லவே பதாம்புயத்தை முகவும்நண்ணி
புகழான வட்சரத்தைக் கற்றோர்போலும்
நல்லதொரு கியானிபோல் இருந்துகொண்டு
நவமான வரட்சரத்தை யோதுவானே.
விளக்கவுரை :
138. ஓதுவான் திரிமுர்த்தி சொரூபன்போலும்
ஓகோகோ நாதாக்கள் தன்மைபோலும்
நீதமுடன் லபிகடந்த சித்தபோலும்
நிலையான தம்பனத்தின் சித்துபோலும்
தீதமுடன் ஞானவா னாகவேதான்
திறமான குளிகைகொண்ட சித்துபோலும்
சாதமது நீக்கினதோர் சற்குருவைப்போலும்
சட்டமது வெகுநெடுவாய்ப் பேசுவானே.
விளக்கவுரை :
139. பேசுவான் குவலயத்தில் ஆசைதன்னை
பேருலகில் மறந்தவன்போல் வாதுகூறி
மாசுடைய மூச்சதனை வுள்ளடக்கி
மகத்தான வனாகதத்தை கீழேநோக்கி
மாசுடைய பற்றதுவும் நீங்கியேதான்
மகத்தான சற்குருவின் பாதம்போற்றி
ஆசுடைய சீடவர்க்கம் நீதானென்று
அப்பனே யுபதேசம் செய்வான்பாரே.
விளக்கவுரை :
140. பாரேதான் சண்முகத்தின் பூசையப்பா
பாருலகி லெப்போதுஞ் செய்யவேண்டும்
நேரேதான் திரிபுரைதான் பூசையப்பா
நெடிதான பராபரியாள் பூசைவேண்டும்
சீரேதான் அஷ்டமா சித்துவேண்டும்
சிறப்பான சோடசமு மறியவேண்டும்
கூரேதான் அஷ்டவர்க்கந் தன்னைக்கண்டு
கொற்றவனு முபதேசங் கூறுவானே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 136 - 140 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar