அகத்தியர் பன்னிருகாண்டம் 101 - 105 of 12000 பாடல்கள்
101. பாரேதான் லட்சண காவியந்தானாகும்
பாங்கான ஞான காவியந்தானாகும்
தேரேதான் வாத காவியந்தானாகும்
தெளிவான மாந்திரீக காவியந்தானாகும்
சீரேதான் தத்துவ காவியந்தானாகும்
சிறப்புடனே சிறுகாவிய மாயிரமுமாகும்
நேரேதான் காவியங்கள் மார்க்கமெல்லாம்
செப்பினேன் ஆயிரமாம் பாடல்தானே.
விளக்கவுரை :
102. பாடவே பெருநூல் செளமியந்தானாகும்
பாங்கான செளமியமு மைந்நூறாகும்
நீடவே சிமிட்டுரத்தின முந்நூறாகும்
நெடிதான பரிபாஷை ஐநூறாகும்
தேடவே ரத்தினமாஞ் சுருக்கமப்பா
தெளிவான பள்ளு நாடகமுமாகும்
கூடவே மருத்துவ பாரதந்தானாகும்
குறிப்பான ஆயுரு வேதமாமே.
விளக்கவுரை :
103. வேதமாம் நாற்காண்ட ஜாலமாகும்
வெளியான நாடிநூ லெண்ணாயிரந்தான்
போதமாம் மணி நாலாயிரந்தானாகும்
பொங்கமுடன் நிகண்டது தானிருநூறாகும்
நீதமுடன் கரசலையும் முந்நூறாகும்
நிலையான வாகடிய மைந்நூறாகும்
தோதமுடன் யமகண்ட மெண்ணூறாகும்
துறையான யேமதத்துவ மெண்ணூர்தாமே.
விளக்கவுரை :
104. தாமான கருக்கிடையு முன்னூறாகு
...... ..... ..... ..... ...று நூறாகும்
வாமான காவியந்தா னாயிரமுமாகும்
வாகான மதிவெண்பா வாயிரமுமாகும்
காமான பெருநூல்கள் தொண்ணூற்றுச்சொச்சம்
பாடிவைத்தேன் சிறுநூல்க ளாயிரத்துச்சொச்சம்
பூமான்கள் கண்டறிய மாநிலத்தில்
புகழ்ச்சியுட னிகழ்ச்சியதாய் தூர்சொன்னாரே.
விளக்கவுரை :
105. தூரான மார்க்கமென்றா லேதுவென்னில்
துப்புரவாய் சாத்திரத்தை முழுதுங்காணார்
தாராள மாகவல்லோ பார்த்தாரானால்
சட்டமுடன் என்பேரிற் குற்றஞ்சொல்வார்
சீரான சாத்திரத்தின் கருவுகாணார்
சிறப்புடனே தலையேடும் முதலேடுங்காணார்
கூரான சூத்திரத்தின் சூட்சங்காணார்
குவலயத்தின் முழுமக்களானோர்பாரே.
விளக்கவுரை :
அகத்தியர் பன்னிருகாண்டம் 101 - 105 of 12000 பாடல்கள்
அகத்தியர் பன்னிருகாண்டம், அகத்தியர், Agathiyar, Agathiyar 12000, Agathiyar Siththar